பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

பன்னிரு திருமுறை வரலாறு


அறியான். இஃது அவ்விருவரது இயல்பு' எனச் செவிலி தலைமகளது கற்பினை நற்ருய்க்கு அறிவிப்பதாக அமைந்தது,

தெய்வம் பணிகழலோன் தில்லைச் சிற்றம்பலமனையாள் தெய்வம் பணிந்தறியாளென்று நின்று திறைவழங்காத் தெவ்வம் பணியச் சென்ருலுமன் வந்தன் றிச் சேர்ந்தறியான் பெளவம் பணிமணியன் ஞர் பரிசின்ன பான்மைகளே. (304) எனவரும் திருக்கோவையாகும்.

தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யுமழை என்னும் பொய்யில் புலவர் பொருளுரையினைத் தன்கண் பொதிந்துள்ளமை காணலாம்.

தலைவனுடன் கூடி மகிழ்ந்த தலைவி, தனக்கு அவன் செய்த தலையளியை நினைந்து, இவ்வாறு அருளும் இவனது அருள் ஒரு நாள் என்னை யொழியப் பிறர்க்கும் ஆகும் எனத் தன்னுள்ளத்துட்கொண்டு பொருமி அழுது புலந்தாள் எனத் தலைவன் தோழிக்கு உரைப்பதாக அமைந்தது,

செவ்வாய் துடிப்பக் கருங்கண் பிறழச் சிற்றம்பலத்தெம் மொய்வார் சடையோ னருளின் முயங்கி மயங்குகின் ருள் வெவ்வாயுயிர்ப்பொடு விம்மிக் கலுழ்ந்து புலந்து ைநந்தாள் இவ்வாறருள் பிறர்க்காகு மென நினைந் தின்ன கையே.

(திருக்கோவை-366) என்பதாகும். ' தவறுபற்றிப் புலப்பள் என்று நீ கூறு கின்ருய். இவ்வாறு யான் செய்த அருள் பிறர்க்கும் ஆகும் என ஒன்றன. உட்கொண்டு இவள் புலக்கின்ருள் ' எனத் தலைவன் தன் தவறின்மையையும் காரணமின்றியும் புலக்கும் தலைவியின் இயல்பினையும் தோழிக்குக் கூறிஞன் என்பதாம். இதன்கண், இவ்வாறு அருள் பிறர்க்காகும் என நினைந்து இன்னகை புலந்தாள் எனவரும் தொடர், தன்னை யுணர்த்தினுங்காயும் பிறர்க்கு நீர் இந்நீர ராகுதி ரென்று ' (1313) என்ற திருக்குறளில் வரும், பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகு திர் என்னும் புலவிக் குறிப்பினை அடியொற்றி அமைந்த தாகும்.

புலவி தீர்ந்து தானும் அவனுமேயாகிப் பள்ளியிடத்தா ளாகிய தலைமகள், தலைவன் பால் பின்னும் ஒரு குறிப்பு வேறு