பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை $盘盛

பாடு கண்டு புலந்து இப்பள்ளிக் கட்டில் பலரைத் தாங்காது’ என்று சொல்லி இறங்கிளுளாக, இவ்வாறு இறங்குதற்குரிய காரணம் யாதோ? என்று அவளயலுள்ள ஆயத்தாராகிய மகளிர் தம்முட் கூறுவதாக அமைந்தது,

மலரைப் பொருவடி மானுந் தமியள் மன்னன் ஒருவன், பலரைப் பொருதென் றிழிந்து நின் ருள் பள்ளி, காமனெய்த அலரைப் பொருதன் றழல்விழித்தோன் அம்பலம் வணங்காக் கலரைப் பொருச் சிறியாள் என்னே கொல்லோ கருதியதே.

(திருக்கோவை-367) என்பதாகும். மலரையும் மிதித்தற்குப் பொருத மெல்லிய பாதத்தினையுடைய மான்போல்வாளாகிய தலைவி தான் ஒருத்தியே அவளருகில் கணவனகிய மன்னன் ஒருவனே; (அங்குப் பிறர் யாருமிலர்) அங்ங்னமாகவும் அவள் இக் கட்டில் (நம்மிருவர்க்கும் மேலாகப்) பலரைத் தாங்கும் வன்மையுடையதன்று என்று சொல்லி அப்பள்ளியினின்றும் விரைந்து இறங்கி நின்ருள் ; மன்மதன் எய்த மலரம் பினைப் பொருது அன்று, அனற் கண்ணினைத் திறந்த இறைவனது சிற்றம்பலத்தைத் தொழாத தீய மக்கள் என்ற வார்த்தையையும் கேட்கப்பொருத அந்நங்கை இந் நிலைமைக்கண் எண்ணியது யாதோ என்பது இதன் பொருளாகும்.

இழிந்து நின் ருள் என்பது விரைய இழிந்தாள் என் னும் பொருள்பட நின்றது. கலர்-தீயோர். கலரைப் பொருச் சிறியாள் என்றது, தி மக்கள் என்ற வார்த்தையைக் கேட்டற்கும் பொருதவள், தீயோர் போன்று வெகுளியுடை யளாய் இவ்வாறு செய்தாள் என்றவாறு. இங்ங்னம் தலை மகள் தான் புலத்தற்குக் காரணமாகத் தான் தலைமகன்பால் உய்த்துணர்ந்து கண்ட குறிப்பாவது, இவ்வாறு அருள் பிறர்க்கும் ஆகும் என நினைந்து இன்னகை புலந்தாள் : (திருக்கோவை-836) என்று தலைமகன் கூறிய கூற்றையே தவருக நினைந்து, அவன் தனது அருளுக்குரியவராகப் பிறரும் உண்டாகக் கூறியதாகக்கொண்டு அவளுேடு புலந்து, இந்த அமளி நம்மிருவரையன்றி நின்னெஞ்சத்தாராகிய மகளிரையும் ஒருசேரத் தாங்கும் வன்மையுடையதன்று என்பாள், பலரைப் பொருது என்று சொல்லித் தலைவளுெடு தான் அமர்ந்திருந்த கட்டிலை விட்டு விரைய இறங்கிளுள் எனத் தலைமகளது புலவி நுணுக்கம் புலனுக அடிகள் இத் திருப்பாடலை அருளிச் செய்துள்ளார். இது,