பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 323.

தும் சிந்தையினும் சென்னியினும் கொண்டு போற்றுதலால் அம்முதல்வனுடைய) திருவடிக்குத் தாராகி அவ் இறை வனுல் அணியப்படும் கொன்றைப்பூவின் தன்மையை யுடையான் ; சான்ருேர் தமக்கு(க் குறையாத நிறைவுடைய நிதி போன்று இருமையும் விளைத்தலால்) சங்கநிதியை ஒப்பான் ; (தன் நண்பர்க்கும் பகைவர்க்கும் முறையே இன்பமும் துன்பமுமாகிய இருவினைப் பயன்களையும் தப்பாது கொடுத்தலால்) ஊழாகிய விதியினை ஒப்பான் ; தன் (சுற்றத்தாரனைவர்க்கும் அணுகி நின்று வழங்கும் பேரருளா ளளுகத் திகழ்தலால்) ஊரின் வாழ்வாரனைவர்க்கும் உண்ணி ரளித்துதவும் ஊருணியை ஒப்பான் ; (இங்ங்னம் குண நலங்களெல்லாம் ஒருசேர அமையப்பெற்றிருத்தலால்) எல்லார்க்கும் பயன்தரும் நற்பொருளாக உள்ளான் என்பது இத்திருப்பாடலின் பொருளாகும். இப்பாட்டு ஐவகைத்திணைக்கும் உரித்தாகலின் பொதுவகைத் தெனப் பெறும் என்பர் பேராசிரியர். இதன்கண்,

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னுற்றுங் கொல்லோ உலகு எனவரும் திருக்குறட் பொருளை நினைந்து, கார் என்றும்,

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்ருற் செல்வம் நயனுடையான்கட் படின் என்பதனை யெண்ணி, அணிகற்பகம்’ என்றும், நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு' என்பதனை யுளங்கொண்டு, கற்றவர் நற்றுணை என்றும்,

ஊருணி நீர்நிறைந் தற்றே யுலக வாம் பேரறிவாளன் திரு என்பதனைக்கருதி உற்றவர்க்கு ஊருணி ' என்றும் ஒப்புர வாளனுகிய தலைமகன் குணங்களைக் கூத்தர் முதலியோர் பாராட்டியுரைக்கும் முறையில் திருவாதவூரடிகள் இத்திருப் பாடலை அருளிச்செய்துள்ளமை படித்து இன்புறற்பால தாகும்.

21.