பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

பன்னிரு திருமுறை வரலாறு


அழைக்க, அவனும் தண்டத்தலைவராகிய அதிகாரியின் முன் சென்று நின்ருன். அவனைக்கண்டு அதிசயமுற்ற அதிகாரி, மெல்லிய உடம்பினனுகிய நீ யார் ? விளங்கச்சொல் ' என்ருன். தந்தை தாய், உடன் பிறத்தார், சுற்றத்தார் ஒருவரும் எனக்கில்லே. பொருளும் இல்லை. இப்பெரிய நகரத்தில் ஒரு மூலையிலிருக்கும் கொற்ருள் யான். பிறர்க் கென உழைப்பதே எனது தொழில். என்னைக்கொண்டு அதிகாரிக்கு என்ன காரியம் ஆகவேண்டும் என்ருன் இறைவன். இம்மொழியினைக் கேட்டு வெகுண்ட அதிகாரி, கொற்ருளாகிய இறைவனை நோக்கி ' உனக்கு அளந்து கொடுத்த கோலறையில் ஒரு கூடை மண் கூ. இட்டா யில்லை. சிறிதும் அச்சமின்றி உரையாடுகின்ருய். உன்னே நூறடிகள் அடித்தாலும் தகும். உன் உடலின் மென்மை யைக் கண்டு அடிக்க மனம் வரவில்லை. விரைந்து சென்று மண்ணை வெட்டியிட்டுக் கரையை அடைப்பாயாக’ எனக் கடிந்து கூறினன். கொற்ருளாகிய அவன் அவ்விடத்தை விட்டகன்று முன்போற் படுத்துகொண்டான்.

மன்னன் ஏவலால் கரையை நோக்கி வந்த தண்டத் தலைவர்கள் பிட்டுவாணிச்சிக்கு அளந்து கொடுத்த ఉమ్బ్రో " அடைக்கப்பெருது வெள்ளத்தால் அறுக்கப்பட் வுறுதலைக் கண்டார்கள். அருகே பணிசெய்யும் சி ருட்களை நோக்கி இஃது யாருடையது எனக்கேட்க இது பிட்டு வாணிச்சியது என்றுரைத்து அவளுடைய கொற்ருள் செய்த குறும்புகளையெல்லாம் எடுத்துக்கூறிஞர்கள். சின முற்ற தண்டத்தலைவர்கள், பிட்டுவாணிச்சியின் கொற்ருளைக் கண்டு நீ சிறிதும் அச்சமென்பதின்றி மண் சுமவ மல் இவ் வாறு விளையாடித் திரிவதற்குரிய காரணமென் ை எனக் கேட்க, அவன் காணம் ஒன்றுமில்லை, கழுத்து நோவச் சுமப்பேன் ' எனக்கூறிஞன். இனி நீ விரைந்து சென்று மண் சுமக்கவில்லையாளுல் நன்ருக அடிப்போம்' என அவர்கள் அவனை அச்சுறுத்தினர். அவன் மிகவும் அஞ்சி யவன் போல ஒரு கூடை மண்னை வெட்டியெடுத்துத் தலை மேற் சுமந்து கொண்டு அடிமேல் அடிவைத்து நடந்தான். அதுகண்ட தண்டத்தலைவர் இக்கொற்ருளாற் சிறிதும் நன்மையில்லை, இவன் உடைப்பினை ஒழுங்காக அடைக்க மாட்டான்' எனச்சினந்து அவனைப்பிடித்து அவனது நடு முதுகிற் சிவக்க அடித்தனர். அந்நிலையில் கொற்ருளாய்

ச் சிதை