பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

பன்னிரு திருமுறை வரலாறு


தேவாரமும் திருக்கோவையும்

தேவாரத் திருமுறையிலுள்ள சொற்ருெடர்களும் கருத்துக்களும் இத்திருக்கோவையில் எடுத்தாளப் பெற்றி ருத்தல் பின்வரும் ஒப்புமைப் பகுதிகளால் இனிது விளங்கும்.

திருக்கோவையாரில் திருவளர் தாமரை எனத் தொடங்கும் முதல் திருப்பாடல்,

திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொள்நெய்தல் குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றை வன்னி மருவமர் நீள்கொடி மாடமலி மறையோர்கள் நல்லூர் உருவமர் பாகத் துமையவள் பாகனை யுள்குதுமே ' (A-97-10) எனத் திருநாவுக்கரசர் அருளிய திருவிருத்தத்தினைச் சொற்ருெடர் வகையாலும் யாப்பினுலும் பெரிதும் ஒத்தி ருத்தல் அறியத்தக்கதாகும்.

சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் (20) எனவரும் திருக்கோவைத் தொடர்,

சிறைகொள் நீர்த் தில்லைதன்னுள் திகழ்ந்த

சிற்றம்பலத்தே (4-22-8) எனவரும் திருநேரிசையினை ஒத்ததாகும்.

இறைவன் திருவடிகளை அடியார்கள் தம் சென்னியிற் கொண்டு முடிமலர் போன்று அணிந்து வழிபடும் முறை பற்றி,

தில்லைச் சிவன் தாளாம் பொற்றடமலர்சூடும்

என்னுற்றல் (21)

எனத் தலைவன் தனது ஆண்மை தோன்றக் கூறுவதாக அமைந்த திருக்கோவைத் தொடர்,

அப்பூதி குஞ்சிப்பூவாய் நின்ற சேவடியாய் ' (A-12-10) எனவரும் அப்பர் அருண்மொழியினை நினைவுபடுத்தும் முறையில் அமைந்ததாம்.

இறைவனுடைய திருவடிக்குத் தொண்டு பட்டமை Urು ஊழிபெயரினும் தான் பெயராத உறுதி படைத்த உள்ளத்தினகிைய தலைமகனை நோக்கி,