பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரமும் திருக்கோவையும் 323

விலங்கலைக் கால்விண்டு மேன்மேலிட விண்ணு மண்ணு

முந்நீர்க் கலங்கலைச் சென்ற வன்றுங் கலங்காய் (24) எனப் பாங்கன் கூறுவதாக அமைந்த திருக்கோவைத் தொடர்,

மண்பாதலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும் விண்பால் திசைகெட் டிருசுடர்விழினும் அஞ்சல்நெஞ்சே :

(4–94-9) எனவும்,

வானந் துளங்கிலென் மண் கம்ப மாகிலென் மால்வரையும் தானந் துளங்கித் தலை தடு மாறிலென் தண்கடலும் மீனம்படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண் டுனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே

(4-112–8)

எனவும் வரும் திருவிருத்தப்பாடல்களின் பொருளை அடி யொற்றி யமைந்திருத்தல் காணலாம்.

உலக மக்களால் தத்தம் தெய்வமென்று மதித்து வணங்கப்பெறும் பல சமயத் தெய்வங்களாலும் இறைவன் எனக்கொண்டு வழிபடப் பெறும் முதன்மை, தேவதேவ கிைய சிவபெருமாைெருவனுக்கே உரியதென்பதும், அம் முதல்வன் தன் திருவடிகளைப் பேரன்பினல் தலைதாழ்த்து வணங்கிப் போற்றும் மெய்யடியார்களை வானேராகிய தேவர்களும் தம் தெய்வமெனக் கொண்டு தொழுது போற்றும் வண்ணம் மேல்நிலையில் வைத்து அருள்புரி வான் என்பதும் ஆகிய உண்மையினை, தெய்வம் பணிகழ லோன் (304) எனவும், தாழச்செய்தார் முடி தன்னடிக் கீழ்வைத் தவரை விண்ணுேர், சூழச் செய்தான் (42) எனவும், சோத்துன்னடிய மென்ருேரைக் குழுமித்தொல் வானவர் சூழ்ந், தேத்தும்படி நிற்பவன் (173) எனவும் வரும் திருக்கோவைத் தொடர்களில் திருவாதவூரடிகள் நன்கு புலப்படுத்தியுள்ளார். இத் திருக்கோவைத் தொடர்கள்,

தொழப் படுந் தேவர் தொழப்படுவானைத் தொழுதபின்னைத் தொழப்படுந் தேவர்தம்மால் தொழுவிக்கும் தன்

தொண்டரையே (4-112-5)

எனவரும் நாவுக்கரசர் தேவாரத்தையும்,