பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் தொடரில் அடிகள் புலப்படுத்தியுள்ளார். இத் தொடருடன்,

புன்னை வெண்கிழியிற் பவளம்புரை பூந்தராய் (2-1-1) எனவும்,

வண்டுபாட விரைசேர்பொன் இதழி தர (1-132-4) எனவும் வரும் தேவாரத் தொடர்கள் ஒப்பு நோக்கியுணரத் தக்கனவாகும்.

தலைமகள், என்னை நீத்தகன்ற வள்ளலை உள்ளம் நெகிழ்வித்து இவ்விடத்தே தரவல்லையோ எனக் கூடற் றெய்வத்தை வாழ்த்திக் கூடலிழைத்து வருந்துவதாக அமைந்தது, ஆழி திருத்தும் (திருக்கோவை- 186) என்னும் முதற் குறிப்புடைய திருப்பா லாகும். இது,

மாடநீர் மருகற் பெருமான் வரிற் கூடு நீயென்று கூட லிழைக்குமே (5-88-8) எனவரும் திருக்குறுந் தொகையினை நினைவுபடுத்தும் நிலையில் அமைந்துள்ளமை காண்க.

  • பாலொத்த நீற்றம்பலவன் (திருக்கோவை - 238) எனவரும் தொடர்,

பாலையன்ன வெண்ணிறு பூசுவர் (2-89-3) எனவரும் தேவாரத் தொடரினை அடியொற்றியமைந்த தாகும்.

தில்லையம்பலவன்பால் பத்திமிக்க அடியவரைப் போன்று ஒரு பித்தி, தன் பின்னேவர, ஒரு பெருந்தகை முன்னே செல்லக் கண்டீரோ எனச் செவிலித்தாய் விரதி யரை நோக்கி வினவுவதாக அமைந்தது,

சுத்திய பொக்கனத் தென்பணி கட்டங்கஞ் சூழ்சடைவெண் பொத்திய கோலத்தினிர், புலியூரம் பலவர்க்குற்ற பத்தியர் போலப் பனைத்திறுமாந்த பயோதரத்தோர் பித்திதற் பின்வர முன்வருமோவொர் பெருந்தகையே (242) எனவரும் திருக்கோவையாகும். இதன் முதலிரண்டடி களிற் குறித்த விரதியர் கோலத்தியல்பு,

வித்தகக் கோல வெண் டலை மாலை விரதிகள் (4-2i-1)

எனவரும் தேவாரத் தொடரிலும், பின்னடிகளிற் குறித்த பத்தியர் நிலையினளாகிய பித்தியின் இயல்பு, முன்னமவ