பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் சிவநெறிக்கொள்கை 器岔篮

ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று என்பதனை ஆசிரியர் மறைமலையடிகளார் அவர்கள் தாம் இயற்றிய மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் ஆராய்ச்சி நூலில் தக்க காரணங்காட்டி விளக்கியுள்ளார்கள். திருமந்திரம் முதலிய ஏனைய திருமுறைகளையும் எட்டாந் திருமுறை யாகிய இத்திருவாசகப் பனுவலையும் ஒப்பு நோக்கிப் பயில் வார்க்குச் சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் சித்தாந்தச் செந்நெறியாகிய திருநெறியினைக் கடைப்பிடித்தொழுகிய அருளாளர்கள் அருளிய பொருளுரைகள் என்பது நன்கு புலம்ை.

கடவுள், உயிர் உலகம் என்னும் இம்மூன்றும் என்றும் உள்ள பொருள்கள் என்பது சைவ சித்தாந்தக் கொள்கை. பிரமம் ஒன்றே உள்பொருள் ; உலகம் வெறும் பொய்த் தோற்றமே என்பது மாயாவாதக் கொள்கை. சிவனருள் பெற்ற செம்புலச் செல்வராகிய திருவாதவூரடிகள் மாயா வாதக் கொள்கையினையும் முப்பொருளுண்மையினை உடன் படாமையால் அதனுேடொத்த உலோகாயதக் கொள்கை யினையும் அறவே வெறுத்து விலக்கியவர் என்பது,

மிண்டிய மாயா வாத மென்னுஞ் சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து உலோகாயதனெனும் ஒண்டிறற் பாம்பின் கலா பேதத்த கடுவிடம் எய்தி (திருவா-போற்றித்-54-57)

எனவரும் திருவாசகத் தொடரால் இனிது விளங்கும்.

உயிர்கள் ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங் களாற் பிணிக்கப்பட்டுள்ளன என்னும் இவ்வுண்மை,

ஆணவ மாயையுங் கன்மமு மாமலம் காணு முளைக்குத் தவிடுமி யான்மாவும் தானுவை யொவ்வாமற் றண்டுல மாய் நிற்கும் பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே. (2.192) எனவரும் திருமந்திரத்திற் கூறப்படுதலால், சைவ சித்தாந்தங் கூறும் மும்மலங்களின் உண்மை தேவார ஆசிரியர்கள் காலத்திற்கு முன்பே சைவ நூல்களிற் பேசப் பெற்றுள்ளமை நன்கு புலளும். இம்மும்மலங்களைப் பற்றிய இயல்புகள் தேவாரத் திருப்பதிகங்களிற் குறிக்கப்

1. மானிக்கவாசகர் காலம் - பக்கம் - 142 - 172.