பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 19

வந்த இறைவன் தன் முடியிற் சுமந்த கூடை மண்ணை வைகைக்கரையுயரும்படி அதன் மேலே கோட்டிவிட்டுப் புன் சிரிப்புடைபனுய் என்னை ஏன் அடிக்கின்றீர்கள் ? என்று சொல்லிக்கொண்டே கொற்ருட்கள் கூட்டத்திடையே புகுந்து மறைந்தனன். தண்டத்தலைவர் அவன் எங்கே ஒடிஞன் எனத் தேடிப்பார்த்தும் காளுரதவராகி அவனை யனுப்பிய பிட்டுவாணிச்சியை யடைந்து அவளைத் தண்டித் தற்கு நெருங்கிஞர்கள். அவர்கள் அணுகுதற்கு முன்னரே முதியவளாகிய அவ்வம்மை சொக்கநாதர் திருவருளால் மண்ணுலகத்தவர் காண மாருஇளநலம் வாய்ந்த தெய்வ வடிவத்தினைப் பெற்று எல்லாவுலகிற்கும் மேலாகிய சிவலோகத்தை யடைந்தாள். அவ் அழகிய காட்சியைக் கண்ட தண்டத்தலைவர்கள் திகைத்து அதிசயித்து நின்றனர்.

இறைவன்மேற் பட்ட அடி, நாடாள் வேந்தளுகிய பாண்டியன் முதலாக இவ்வுலகில் வாழும் நிற்பன நடப்பன வாகிய எல்லாவுயிர்களின் முதுகிலும் ஏனையுலகங்களில் வாழும் தேவர் அசுரர் முதலிய எல்லோர் முதுகிலும் பட்டுப் புடைப்பி ைஉண்டாக்கியது. மதுரை நகர மக்கள், இதனை யறிவோமென்று பாண்டி மன்னனையணு, கி ஒருவன் மேல் அடித்த அடி யாவர் மேலும் பட்டதென்ன' எனக்கேட்டனர். அரசனும் தன் முதுகைக்காட்டி இதன் உண்மையினைச் சொக்கநாத்ரே அறிவார் ' என்ரு ைஅப்பொழுது வாதவூரடிகள் பொருட்டு இறைவனருளால் விசும்பிடத்தே ஒர் அருள் வாக்கு எழுந்தது. பாண்டியனே, நீ வேதநூற் பிராயமாகிய நூருண்டு நெடிது வாழ்வாயாக. நேற்பேறு டையவன். தினதுபொருள் அறத்தின் வழியே ஈட்டப் பட்டதாதலால் அதனை வாதஆரன் வாயிலாக நம் அடியார் களுக்கு வாங்கிக்கொடுத்தோம். அப்பொருளுக்குத்தக நீ விரும்பிய வண்ணம் குதிரைகளையும் கொண்டுவந்து தந்தோம். அவனை விடுவித்தற்காகக் கொற்ருளாக வந்து மண் சுமந்து பிட்டும் தின்று அடியும் பட்டோம். அவனைச் சிறை நீக்கி அவன் விரும்பிய வண்ணம் இயங்கச்செய்வா யாக இங்ங்ணம் செய்வதனுல் நினக்கே தலம் பெகுரும்: என ஆகாயத்தில் தோன்றிய அருள் மொழியினை ஆங் குள்ளார் அனைவரும் கேட்டு அதிசயித்து அரசன் நோக்கினர்.