பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

பன்னிரு திருமுறை வரலாறு


தின் இரு வேறு திறங்கள் ஆதலின், அதனை இருள் எனவும், அஃது அறியாமையைச் செய்தலின், அஞ்ஞானம்' எனவும், உயிர்களின் அறிவு செயல் முதலியன வெளிப்பட ஒட்டாது அவற்றைக் கயிறுபோல் இறுகப் பிணித்து நிற்றலின் பாசம் ' எனவும், உயிர்கட்குக் கலக்கத்தை விளைவித்தலின் மலம்' எனவும், அம்மலத்தின் முனைப்பால் உயிர்கள்பால் நிகழும் வினைகள் கொடுமையுடையனவா யிருத்தலின் கடிய வினை எனவும், இவ்வாறு தொன்று தொட்டு உயிர்களைப்பற்றிவருத்தும் பழைமையுடையதாதல் பற்றி அதன்ப் பழமலம்' எனவும், உயிர்கள் அடையும் எல்லாத் துன்பங்கட்கும் காரணமாதல் பற்றிப் பாசவேர் எனவும் திருவாதவூரடிகள் ஆணவமலத்தின் இயல்பினை விளங்க அறிவுறுத்தியுள்ளார். இந்நுட்பம்,

வல்வினையேன் தன்னை, மறைந்திட மூடிய

மாய இருளை (சிவ புராணம் - 50, 51) என்னுடை யிருளே ஏறத் துரந்தும் (கீர்த்தித் - 6) அவன் வாங்கிய என் பாசத்திற் காரென்று

அவன் தில்லையின் ஒளி போன்று (திருக்கோவை-109)

அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

(சிவபுராணம்-40, பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே ( ഒക്ട. 64) பாசத் தளையறுத்து ஆண்டுகொண்டோன்

(திருக்கோவை-115) கடலின் திரையதுபோல்வரு கலக்க மல மறுத்து

(உயிருண்ணிப்பத்து) கடிய வினையகற்றிப், பழமலம் பற்றறுத்தாண்டவன்

(திருப்பாண்டிப் பதிகம்) பாசவேர் அறுக்கும் பழம்பொருள் (பிடித்த பத்து) என வரும் அடிகள் வாய்மொழிகளால் இனிது புலனுதல் உணரத்தக்கதாகும்.

உயிர்களைப் பொதிந்துள்ள மலத்தின் இயல்பினைக் கூறுமிடத்து, அம்மலத்தின் ஆற்றலைக் கெடுத்து உயிர்கஜன் உய்வித்தருளும் சிவத்தின் இயல்பினே, அஞ்ஞானந்தன்னை அகல்விக்கும் நல்லறிவு' எனவும், மலம் அறுத்து என் உடலும் எனதுயிரும் புகுந்து ஒழியாவண்ணம் நிறைந் தான் எனவும் கழிவில் கருணை எனவும், பழம்பொருள் எனவும் அவன் தில்லையின் ஒளி' எனவும் வரும் தொடர் களில் அடிகள் உடன் வைத்து உணர்த்தியுள்ளார். பழம் பொருளாகிய சிவம் என்றும் நல்லறிவுப் பொருளாகத்