பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் சிவநெறிக்கொள்கை 337

ஆன்மா, தன் பொருட்டன்மையழிந்து சிவம் ஒன்ருயே ஒழியாமலும், சிவத்தின் வேருய்த் தான் தனித்து நில்லா மலும், பாலோடு அளாவிய நீர் தன் உண்மை கெடாமல் பாலின் தன் மையதாய் அதனுடன் பிரிவறக் கலந்து ஒன்ருதல் போன்று, மலம் நீங்கித் துயதாகித் தன் உண்மை கெடாமல் சிவத்துடன் இரண்டறக் கலந்து ஒன்ருதலையே சிவமாதல் எனச் சைவ சித்தாந்த நூல்கள் கூறும் என்பது மேற்காட்டிய திருமந்திரப் பாடலில் தெளி வாக விளக்கப்பட்டிருத்தல் காணலாம்.

" ஆதித்தப் பிரகாசம் காட்டாகப் பிரபஞ்ச ரூபத்தைப் பற்றிநின்ற கண்ணுனது, அந்த உருவங்களை விட்டு அந்தப் பிரகாசத்துக்கு முதலாயிருக்கிற ஆதித்தனைக் கண்டு பிரிவற நின்ருற்போல, ஆன்மாவும் அருளிடமாகக் கூடி நின்று சத்தாதி விடயங்களைப் புசித்து நிற்கச் செய்தே அதனையும்விட்டு மனேவிகாரமும் அடங்கி அந்த அருளுக்கு முதலாயிருக்கிற சிவத்தோடும் அந்த அருள் காட்டாகச் சென்று கூடிப் பிறிவற்று இரண்டற நிற்கையால்" ஆன்மா அந்தச் சிவத்தோடுங் கூடிச் சிவமாய் நிற்கும் எனக் கூறி, அதற்குப் பிரமாணமாக,

அவமாய தேவர் அவகதியி லழுந்தாமே

பவமாயங் காத்தென்னை யாண்டுகொண்ட பரஞ்சோதி

நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாமொழிந்து சிவமானவா பாடித் தெள்ளேனங் கொட்டாமோ

1 திருவா-திருத்தெள்-A, எனவரும் திருவாசகத் திருப்பாடலை எடுத்துக்காட்டுவர் மதுரைச் சிவப்பிரகாசர். " சிவமாய் என்றது ஆன்மா தற்போதமாய் நிற்பதுஞ் செய்யாமல் தானென்கிற முதல் கெடுவதுஞ் செய்யாமல் தற்போதங் கெட்டு அந்தச் சிவத் தோடுங் கூடி இரண்டற நின்று அநுபவித்தது என அறிக. அப்படிச் சிவமாய் என்ற சொல் அந்தச் சிவமாவதுஞ் செய்யாமற் பிறிந்து நிற்பதுஞ் செய்யாமல் நிற்கை என் பதற்குப் பிரமாணம் சங்கற்ப திராகரணத்தில், ஆளுய் என்பதனைத்தும் அவ்வவை, தானுகாமையைச் சாற்றிடும் என்க, தாமே யெனுமித் தனியேகாரம், அழிந்திலர் அதுவே ஆய்த்திலர் அது விட்டொழிந்திலர் பிறிவிலர் எனுமிவை உணர்த்தும் " (சிவப்பிரகாசம் 80-ம் செய்யுள் உரை) எனச் சிவமாதல் என்னுஞ் சொல்லுக்கு அவ்வாசிரியர் கூறும் விளக்கம் இங்கு உணரத்தக்கதாகும்.

22