பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$36 பன்னிரு திருமுறை வரலாறு

எம்பிரா னென்றதேகொண் டென்னுளே புகுந்துநின்றிங் கெம்பிரா ட்ைட ஆடி யென்னுளே யுழிதர்வேனே

எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்குமென்ருல் எம்பிரா னென்னி னல்லால் என்செய்கேன் ஏழையேனே.

(4-76-器》 எனவும்,

தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும் ஆகின்ற தன்மையனை (6-98–7) எனவும,

' என்னணுய் என்னுளுய்' (6–95.7 எனவும் திருநாவுக்கரசு நாயனரும்,

திகழ்ந்தமெய்ப் பரம்பொருள் சேர்வார்தாமே தானுகச் செயுமவன் {1-126-7)

எனவும்,

அப்பரிசிற் பதியான அணிகொள் ஞானசம்பந்தன் 1-54-11) எனவும் ஆளுடையபிள்ளையாரும்,

நாற்ருனத் தொருவனே நானுயபரனை (7–38-4) எனவும்,

என்னவனும் அரன் (7–39-11)

எனவும் நம்பியாரூரரும்,

நானவனென் றெண்ணினர்க்கு நாடுமுளம் உண்டாதல் தானெனவொன் றின்றியே தானதுவாய்-நானெனவொன் றில்லென்று தானே யெனுமவரைத் தன்னடிவைத் தில்லென்று தாளும் இறை. (சிவஞானபோதம்-சூ. 10. வெ-1) என மெய்கண்ட தேவநாயனரும் ஒதியவாற்ருல் நன்கு உணரப்படும். திருமூலர், வேதாந்தம் என்றது உபநிடதங் களே. மாயாவாதத்தை வேதாந்தமென வழங்குதல் பிற்கால வழக்கு.

சிவத்தின் திருவடியைச் சேர்தல் என்பது, இறைவன் திருவருளிற் பதிதலாதலின், அதனைச் சிவமாதல் என வழங்குதலும் திருமூலர் காலந்தொட்டு வழங்கிய சைவ சித்தாந்த வழக்கேயாகும். இவ்வுண்மை,

ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்ருக நின்று சமய நிராகாரம் நீங்கியே நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற் சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே. (1437) எனவரும் திருமூலர் வாய்மொழியால் இனிது புலனும்.