பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

பன்னிரு திருமுறை வரலாறு


சிவமாகிய முழுமுதற்பொருள் ஒன்றையே குறிக்க வேண்டின் அதனை ஏகம் என்ற சொல்லாற் கூறுதல் அமையும். சிவமும் உயிரும் தனித்தனி வேருய் நிற்பின் துவிதம் என்ற சொல்லாற் சொல்லலாம். இவ்வாறு இறை வன் ஒன்ருயும் இரண்டாயும் நில்லாமல் உயிர்களோடு பிரிப்பின்றி உடனுய் நிற்றலால், அவ்விரண்டற்ற நிலையை வடமொழியில் அத்து விதம் ' என்ற சொல்லாற் குறித் தனர் சான்ருேர். " சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் ஆன்மா " என்பது மாண்டுக்ய உபநிடதம். அத்து விதம் என்ற சொல்லுக்கு ஏகம் (ஒன்று) என ஒரு சாராரும், துவிதம் (இரண்டு) என மற்ருெரு சாராரும் பொருள் கொண்டனர். ஒன்றும் இரண்டும் ஆகா இரண்டற்ற தன்மை என இதற்கு உண்மைப் பொருள் கண்டார் மெய்கண்டார். இங்ங்னம் ஒன்றெனலும் ஆகாமல் இரண் டெனலுமாகாமல் தூய நல்லுயிர்கள் சிவத்தோடு இரண் டறக் கலந்து சிவத்தன்மையாய் அடங்கி ஒன்ருகும் வீடு பேற்றின் நிலையே சிவமாதல் என்னும் சொற்ருெடரால் அறிவுறுத்தப்பெறும் சைவ சித்தாந்த முடி பொருளாகும். அம்முடியினைத் தெளிவிக்கும் நிலையில் அமைந்ததே, நவ மாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து சிவமான வாபாடி எனவரும் திருவாசகத் தொடராகும். இறைவ னருளும் சிவஞானத்தால் உள்ள ந் தெளிவு பெருதவர்கள் இங்ங்னம் சிவமாதலாகிய பேரின்ப நிலையை அடைய மாட்டார்கள் என்பதனை,

தெளி வறியாதார் சிவமாக மாட்டார் 1480)

என வரும் தொடரால் திருமூலநாயனுர் அறிவுறுத்தி யுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன் புலயை மைந்தனே டெண் வகையாய்ப் புணர்ந்துநின்ருன் உலகே ழெனத்திசை பத்தெனத்தா ைெருவனுமே பலவாகி நின்றவா தோணுேக்கம் ஆடாமோ.

(திருவா - திருத்தோளுேக்கம் - 5) எனவரும் திருப்பாடல், இறைவன் ஐம்பூதங்கள், ஞாயிறு, திங்கள், ஆன்மா ஆகிய எல்லாப் பொருள்களிலும் பிரி வின்றிக் கலந்து o விளங்குந் திறத்தினை விரித்துரைப்ப தாகும். இறைவன் இவ்வாறு பொருள் தோறும் யாண்டும் நீக்கமறக் கலந்து உடனுய் நிற்கும் இயல்பினைக் கூறுவது,