பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் சிவநெறிக்கொள்கை 333

தான் ஒருவனுமே பலவாகி நின்றவா' என்ற இத்தொட ராகும். இறைவனையன்றி வேருெரு பொருளும் இல்லா திருக்க அவன் ஒருவனே உலகுயிர்களாகிய பல பொருள் களுமாய்க் காணப்படுகின்ருன் என இத் தொடர்க்குப் பொருள் கூறுதல் திருவாதவூரடிகள் கருத்துக்குச் சிறிதும் ஒவ்வாததாகும். ஒரு பொருளே பல பொருள்களாகத் தோற்றுதலும், ஒருபொருளே பல பொருள்களிலும் ஊடுருவி நிற்றலும் தம்முள் மாறுபட்ட இரு வேறு தன்மை களாகும். இவ்விரண்டினுள் இத்திருப்பாடலில் திருவாத வூரடிகள் குறித்தது, ஒரு பொருளே தம்முள் வேறுபட்ட பல பொருள்களிலும் இரண்டறக்கலந்து நிற்கும் இயல்பினையே யாகும். இந்நுட்பம், எண்வகையாய் நின்ருன் என்னுது எண்வகையாய்ப் புணர்ந்து நின்ருன் எனத் தாம் கூறும் பொருள் இனிது விளங்க அடிகள் விரித்துரைத்தலால்

உணரப்படும்.

புணர்ந்து நிற்றல் என்றது, ஒரு பொருள், தானல்லாத வேறு பொருளுடன் கூடி நிற்றலைக் குறிப்பதன்றி, ஒரு பொருளே பலவாய் விரிந்து தோன்றுவதனையோ ஒன்று மற்ருென்ருகத் திரிந்து தோன்றுவதனையோ குறிப்ப தன்ரும். ஓர் உடம்பினுட் கலந்து நிற்கும் உயிர், அவ்வுடம் பின் ஐம்பொறிகளினும் ஐம்புல உணர்வினைத் தோற்று வித்தல் பற்றி உடம்போடு ஒன்ருய்க் கலந்திருப்பினும் உண்மையால் நோக்கும் வழி அவ்வுயிர், உடம்பின் வேருதல் போன்று, இறைவனும் உலகுயிர்கள் எல்லா வற்றினும் நீக்கமறக் கலந்து நின்று அவற்றை இயக்கு வித்தல் பற்றி அவை பலவுமாய் விரவியிருப்பினும் உண் மையில் அம்முதல்வன் அவற்றின் வேருய்த் தான் ஒரு வனே யாவன் என்னும் மெய்ம்மையினையே தான் ஒருவ னுமே பலவாகி நின்றவா எனவரும் இத்தொடரில் அடிகள் விளக்கியுள்ளார். ஒருவன் எனவே ஒருவன் என்னும் ஒருவகிைய இறைவனும், பல எனவே அவ னல்லாத உலகு உயிர்களும், ஆகி எனவே அவற்ருேடு அத்து விதமாய்க் கலந்து விளங்கும் அவனது தன்மையும் புலப்படுத்தப் பெற்றமை உணரத்தகுவதாகும். இக்கருத் தினை, " நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும், எள்ளும்

எண்ணெயும் போல் நின்ற எந்தையே " என முன்னரும்

1. திருவா - திருச்சதகம் - 46.