பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

பன்னிரு திருமுறை வரலாறு


அடிகள் வற்புறுத்தியுள்ளமை இங்கு ஒப்ப வைத்து உணர்தற் பாலதாகும்.

இறைவன் எல்லாப் பொருள்களுமாய்க் கலந்துள் ளான் என்று கூறிய அளவில், இறைவன் ஒருவனே உலகமாகவும் உயிர்களாகவும் தோன்றுகின்ருன் ; அவனை யன்றி வேருெரு பொருளும் இல்லை எனப் பிறர் பிறழ வுனராதவாறு,

நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீகால் ஆய், அவையல்லையாய்,

ஆங்கே, கரந்ததோர் உருவே

எனவும்,

பெண்ணுகி ஆளுய் அலியாய்ப் பிறங்கொளிசேர்

விண்ணுகி மண்ணுகி இத்தனையும் வேருகி எனவும்,

எல்லா வுயிருமாய்த் தழைத்துப்

பிழைத்தவை யல்லையாய் நிற்கும், எத்தனே

எனவும், அம்முதல்வன் கலப்பினுல் ஒன்ருயும், பொருட்டன் மையால் வேருயும், உயிர்க்குயிராதற்றன்மையால் உடன யும் நிற்குந் திறத்தினத் திருவாதவூரடிகள் விளக்கிய திறம் ஈண்டு நினைத்தற்குரியதாகும். இறைவன் கலப்பினுல் உலகுயிர்களாக நிற்குந் திறத்தினை நின்ற திருத்தாண்ட கத்திலும், பொருட்டன்மையால் அவற்றின் வேருதலை விரிகதிர் ஞாயிறல்லர் , மண்ணல்லை விண்ணல்லை : முதலிய திருப்பாடல்களிலும் திருநாவுக்கரசர் அறிவுறுத்தி யுள்ளமை இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தக்கதாம்.

கதிரவன் எழுந்த அளவில் உலகிற்புறவிருள் மறைந்து போக மக்கள் கண்ணறிவு விளங்கப்பெற்று எதிர்ப்பட்ட எல்லாப் பொருள்களையும் காணப்பெறுதல் போன்று, ஆன்மாவுக்கு இறைவனது அருளொளி தோன்றிய அளவில் இதற்கு முன் அதனைப் பற்றியிருந்த ஆணவ இருள் அகன்று மறைய அவ்வருளொளியின் உதவியால் ஆன்மா, தன்னையும் தன் முதல்வனையும் ஏனைய பொருள்களின் நிகழ்ச்சியினையும் உள்ளவாறு காணும் ஆற்றலைப் பெறு கின்றது. பளிங்கினில் விளங்கித் தோன்றிய மலர்களின் வடிவும் நிறமும் கதிரவன் வானின் உச்சியை யடையும் போது மெல்ல மெல்லக் குறைந்து உச்சிக்கு வந்த நிலையில் முற்றிலும் இல்லையாய் ஒழிதல்போன்று, செஞ்ஞாயிருகிய