பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் சிவநெறிக்கொள்கை 341

இறைவனது அருள் விளக்கம் உயிரின்கண் பதியுந் தோறும் பதியுந்தோறும் முன் ஆன்மாவைப் பற்றியிருந்த மாயை கன்மங்களின் சார்பும் அணுவணுவாய்த் தேய்ந்து, பின்னர் அவ்வருளொளி ஆன்மாவை முற்றிலும் அகத் திட்டுக்கொண்ட நிலையில் அவற்றின் பற்று ஆன்மாவை விட்டு முற்றிலும் இல்லையா யொழிந்துபோம். இவ்வாறு மாயை கன்மங்களின் சார்பு முற்றுங்கெடச் சிவனுெளியில் ஒன்றித்துக் காணும் தூய நல்லறிவினராகிய சிவஞானி கட்கு மெய்ப்பொருளாகிய சிவபரம்பொருளையன்றி உயி ராகிய தம்மைப்பற்றிய உணர்வும் ஏனைய உலகப் பொருள் களும் தோன்ருதொழியும். இவ்வுண்மையினை, ஐம்புலன் கையிகந்து சிவனருளில் திளைக்கும் செம்புலச் செல்வராகிய திருவாதவூரடிகள், தாம் பெற்ற சிவாநுபவத்தில் வைத்து எடுத்துரைத்துப் போற்றுவதாக அமைந்தது, இன்றெனக் கருளி யிருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்

நீயலாற் பிறிது மற்றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்ரும்

திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றும் நீ யல்ல அன்றியொன்றில்லை

யாருன்னை யறியகிற்பாரே.

(திருவாசகம்-கோயிற்றிருப்பதிகம்-7) என வரும் திருப்பாடலாகும். நின் திருவருளைப் பெறும் வாய்ப்பினைப் பெற்ற இக்காலத்து, அடியேற்கு நின் திரு வருளை வழங்கி என்னை மறைத்துள்ள ஆணவ இருளை அகற்றி(ப் பளிங்கனைய) என்னுள்ளத்தின்கண்ணே எழுந்து தோன்றும் கதிரவனைப் போன்று (என்னுள்ளும் புறம்புமாக யாண்டும் நிறைந்து) நிற்கும் நினது இயல்பினைச் சுட் டுணர்வினுல் வேறு வைத்துணரும்) நினைப்பு முற்றும் நீங்க (நின் அருளின் வண்ணமாய் ஒன்றியிருந்து) நினைப்பேனு யினேன். (அங்ங்னம் நினைத்த அளவிலே என்னை அகத் திட்டுக்கொண்டு விளங்கும்) நின்னையன்றி (மாயாகாரிய மாகிய பொருள்களுள் ஒன்றும் இல்லையென்னும்படி உல கெலாம் ஆகி யாண்டும் விரிந்து பரவிச் சென்று அணு வினும் மிக நுண்ணியயை உலகுயிர்கள் தோறும் ஊடுருவி மறைந்து (இங்ங்ணம் உள்ளும்புறம்புமாய், யாண்டும் நீக்க மற நிறைந்து) யாவும் ஒன்ருய்ப் பிரிவின்றி விளங்கும்