பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

பன்னிரு திருமுறை வரலாறு


திருப்பெருந்துறைப் பெருமானே, (நீ இவ்வாறு உலகெலா மாகி நிற்பினும் அவற்றின் தன்மை நினக்கு எய்தலின்றி அவற்றுள் ஒன்றினுந் தோய்வின்றியுள்ளாய் ஆதலால்) நீ அவற்றுள் ஒன்றும் ஆவாய் அல்லை. (உலகுயிர்கள் எல்லா வற்றிற்கும் ஆதாரமாகத் திகழ்வோன் நீயேயாதலின்) நின்னையன்றி அவற்றுள் ஏதொன்றும் இல்லை. மும்மலப் பிணிப்புற்று நிற்கும் இக் கட்டுநிலையில் நின்னைத் தம்மின் வேருகக் காண்பார்க்கு அவர் காணும் காட்சியுள்ளாகவே நீ புலப்படாது மறைந்திருத்தலின் அன்னேர் நின்னை உள்ளவாறு காணுதல் இயலாது. இனி, நினதருளாற் பாசப் பிணிப்பினின்றும் விடுபட்டு நின்னருள்வழி நின்று காணும் சிவஞானிகட்கு மீட்டுணர்தற்குக் கருவியாகிய சித்தவிருத்தியும் ஒடுங்குதலால் அந்நிலையில் நீ வேறு தாம் வேருய்ப் பிரிந்து நின்று காணுதலும் இயல்வதன்று. எனவே யார்தாம் நின்னியல்பினை உள்ளவாறு உணர வல்லார் ? என்பது இதன் பொருளாகும்.

இதன்கண், சென்று சென்று:அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்ரும் ' என வரும் தொடர், நேரியனுய்ப் பரியனுமாய் , உலகெலாமாகி வேருய் உடனுமாய் நிற்கும் இறைவனது இயல்பினை யுணர்த்துவதாகும். இந் நுட்பம், " திரண்டாம் பயனெனுந் திருவருள் தெளியிற், சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்ரும், என்றிறை யியற்கை இயம்புதல் " என உமாபதி சிவாசாரி யார் தாம் இயற்றிய சங்கற்ப நிராகரணத்தில் இத் தொடரை இறைவனியல்புணர்த்தியாகக்கொண்டு எடுத் தாளுதலாலும், என்று திருவாதவூர் நயினர் கர்த்தாவி னுடைய தன்மையை அருளிச் செய்தது எனவரும் உரைக் குறிப்பாலும் உய்த்துணரப்படும்.

இறைவனது திருவருளுக்குரியராகிய சிவஞானிகள் முதல்வனுடன் பிரிப்பின்றி ஒன்றியுடனும் வீட்டு நிலையில், முதல்வனும் உளன் : அம் முதல்வைேடு ஒன்றிச் சிவானந்தம் நுகரும் உயிரும் உளது; முன் உயிரைப்பற்றி நின்று பின் அப்பிணிப்பினின்றும் விலகிச் செயலற்று அடங்கிய மலமாயை கன்மங்களும் உள்ளன. முன்பெல்லாம் உயிரை இறுகப் பிணித்து நின்ற மும்மலப் பிணிப்பு அவ் வுயிரை விட்டு நீங்கினமையால், உயிரானது முதல்வனது திருவருளில் மூழ்கி அவ்வருளே மேற்பட்டுத் தோன்றத்