பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் சிவநெறிக்கொள்கை 343

தான் அதன்கண் பிரிவற இயைந்து பேரின்பம் நுகர்ந் திருக்கும். அவ்வளவே அவ்வுயிரின் முன்னைய நிலைக்கும் பின்னைய நிலைக்கும் உள்ள வேறுபாடாகும்.

இன்றெனக்கருளி என வரும் இத்திருப்பாடற் பொருள் நுட்பத்தையுணர்ந்து சிவஞானம் பெற்ற நல்லுயிர் தன்முனைப்படங்கி இறைவன் அருள்வழி படங்கி ஒற்றித்து நிற்கும் திறத்தினை அறிவுறுத்துவது,

"அவனே தானே யாகிய அந்நெறி

ஏகளுகி இறைபணி நிற்க மலமாயை தன்னெடுவல்வினையின்றே" (சிவஞானபோதம்-10) எனவரும் சிவஞானபோதம் பத்தாஞ் சூத்திரமாகும். இறைவன், உயிர்களின் பெத்தநிலையில் அவற்ருேடுங் கூடி நின்று காரியப்படுத்தும் பொழுதே தானுெரு முதல் இல்லையென்னும்படி தோன்ருமல்நின்று காரியப்படுத்தினுற் போன்று, உயிராகிய நீயும் சிவனது ஞானத்தினுலல்லவோ காரியப்பட்டு வருகிருேம் என்பதை யுணர்ந்து ஆன்ம போதம் சீவியாமல் அவனருள்வழி யடங்கி நிற்பாயாக என அறிவுறுத்துவது, இச்சூத்திரமாகும். உயிர் தன்னைப் பிணித்துள்ள மும்மலப் பிணிப்பு அற்று நீங்கும்பொருட்டு, அவற்றின் இயல்போடு ஒன்றுபட்டுநில்லாது சிவத்தினியல் போடு ஒன்றியிருந்து அதுவே தானுய் நிற்கும் பயிற்சியினை இடையருது மேற்கொள்ளுதல் வேண்டும். இடையருது நிகழும் அப்பழக்கத்தினுல், உயிரைப் பற்றியிருந்த மலத்தி னியல்பு அதனை விட்டு நீங்க, உயிர் செம்பொருளாய சிவத் தின் இயல்பில் அடங்கி நிற்கும். மலம் அறுதற்பொருட்டுச் செயற்பாலதாகிய இப்பயிற்சியினை, தானவளுகும் சமாதி கைகூடிஞல் ஆன மலமறும் அப்பசுத் தன்மைபோம் (2320) எனவரும் திருமந்திரத்தில் திருமூல நாயனர் அருளிச் செய்துள்ளார்.

இறைவன் திருவருளிலே உறைத்து நிற்பார்க்குப் புறத்தே யுள்ள புறப்பொருள்களைப் பற்றிய உணர்வும், தம் மோடு உடனுய் நிற்கும் உடம்பைப் பற்றிய உணர்வும், தமக்கு அகக் கருவிகளாயமைந்த மனம் முதலியவற்றைப் பற்றிய உணர்வும், உயிராகிய தான் ஒரு பொருள் உண்டு என எண்ணுந் தன்னைப் பற்றிய உணர்வும் நிகழாத வண்ணம் அவையனைத்தும் மறக்கப்பட்டு மறைந்தொழித