பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை 351.

பண்களென்பதும் நன்குபெறப்படும். இருபத்தொன்பது பதிகங்களுள் இருபத்தொருபதிகங்கள் பஞ்சமப்பண்ணிற் பாடப்பெற்றிருத்தலை உற்று நோக்குங்கால் இப்பண் சிந்தை தெளிந்து செம்பொருளாகிய இறைவனைப் போற்றுதற்குப் பெரிதும் ஏற்புடைய தென்பது இனிது புலனுகும். " பஞ்சமம் பாடியாடுந் தெள்ளியார் கள்ளந் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளியாரே " (A-29-3 என்பது திருநாவுக்கரசர் வாய்மொழி.

க. திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா ஆசிரியர் ஒன்பதின்மருள் முதல்வராக எண்ணப்படுபவர் திருமாளிகைத் தேவர். இவர் பாடிய திருப்பதிகங்கள் நான்கும் ஒன்பதாந்திருமுறையின் முதற்கண் வைக்கப்பட்டுள்ளன. இவை நான்கும் தில்லைச் சிற்றம்பலத்தைப் பற்றியனவாக அமைந்திருத்தலால் இவ் வாசிரியர் தில்லைப்பதியைத் தமக்குரிய உறைவிடமாகக் கொண்டிருந்தாரென்று எண்ணஇடமுண்டு. திருமாளிகைத் தேவரென்னும் பெயர் இயற்பெயராகத் தோன்றவில்லை. ஏதேனுமொரு காரணம் பற்றி வழங்கிய சிறப்புப் பெயராகவே இதனைக் கொள்ளுதல் பொருத்தமாகும். திருமாளிகையென்பது "மாடமாளிகைசூழ்தில்லையம்பலம்" 1 எனத் தேவார ஆசிரியராற் சிறப்பித்துப் போற்றப்பெற்ற தில்லைச் சிற்றம்பலப் பெருங்கோயிலைக் குறித்து வழங்கிய பெயரென்றும், அத்திருக்கோயிலிற் பிரியா துறைந்து திருச்சிற்றம்பலவனைப் போற்றிய தெய்வ வாழ்க்கை யுடையவராக இவர் திகழ்ந்தமைபற்றித் திருமாளிகைத் தேவரென அழைக்கப் பெற்ருரென்றும் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

' வரந்தருந் தொல்லைத்தில்லை மாளிகை மடத்து மன்னும்

அருந்தவ முனிவெண்காடன் அருள் விநாயகன் மனத்தாற் பரிந்தெனை யாண்டுகொண்ட படர்சடைக் கடவுள் நீதி திருந்திய பரமஞான சிவனடி சென்னி சேர்ப்பாம் ” எனப் பெரும்பற்றப் புலியூர் நம்பி, தம் ஆசிரியர்க்கு வணக் கங் கூறுதலால் அவர் வாழ்ந்த கி. பி. பதின்மூன்ரும் நூற்

1. நாடிநாரானன்” என்ற முதற் குறிப்புடைய திருக்குறுந் தொகை.

2. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் கடவுள் வாழ்த்து 22-ம் செய்யுள்.