பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 21

குன்றம் ஆகிய தலங்களில் நமது திருமேனியைக் கண்டு மகிழ்ந்து, கோவை யென்னும் சிறந்த பனுவலேப் பாடிக் கொண்டு திலலையம்பலத்தே வருக என்றதோர் அருள் வாக்கினை விசும்பில் தோற்றுவித்தருளினர். அவ்வருள் மொழியைச் செவிமடுத்த வாதஆாடிகள் அவ்வண்ணமே திருவுத்தரகோசமங்கை, திருக்கழுக்குன்றம் முதலிய தலங் களைப் பணிந்து திருவாசகமாகிய செந்தமிழ்ப் பாடல்களைப் பாடிப் போற்றித் தில்லைப்பதியிற் போந்து புத்தர்களை வாதில் வென்று யாவரும் புகழ்ந்து போற்றத் தில்லைச் சிற்றம்பலவன் பொன்ஞர் திருவடிகளை யடைந்து ஈறிலாப் பேரின் பத்தில் திளைத்து மகிழ்ந்தார்.

இவ்வாறு பெரும்பற்றப்புலியூர் நம்பி வாதவூரடிகளது வரலாற்றை வகைபெற விளக்கியுள்ளார். இவ்வாசிரியர் கூறியது போலவே பிற்காலத்தவராகிய பரஞ்சோதி முனிவ ரும் தாம் பாடிய திருவிளையாடற் புராணத்தில் மாணிக்க வாசகரது வரலாற்றை நான்கு படலங்களில் விரித்துக் கூறி யுள்ளார். எனினும் பெரும்பற்றப்புலியூர் நம்பி கூருத புதிய விளக்கங்கள் சிலவும் அவர் கூறியதற்குச் சிறிது வேறுபட்ட நிகழ்ச்சிகள் சிலவும் பரஞ்சோதி மு ைவர் இயற்றிய திரு விளையாடலில் இடம் பெற்றுள்ளன. அவற்றைத் தொகுத்து நோக்குவோமாக.

(2) பாஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம்

திருவாதவூரில் வாதவூரர் பிறந்து வளர்ந்த காலத்தில் பாண்டிநாட்டை ஆட்சிபுரிந்த மன்னன் அரிமர்த்தன பாண் டியன். வாதவூரர் அம்மன்னனுக்கு முதல் மந்திரியாய்க் காரியஞ் செய்து ஒழுகினர். அவர் அந்நாளில் நாதனுகிய தன்னையும் என்னேயும் நல்கும் போதருகிய குருபரன் வரு வது எப்பொழுது ?’ எனச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அந்நிலையில் பாண்டியன் குதிரைகளே வாங்கி வருதற் கெனத் தந்த பொன்களை ஒட்டகங்களில் ஏற்றி ஏவலா ளர்களே முன்னே செல்ல விடுத்த வாதவூரர், அங்கயற் கண்ணியொடும் அமர்ந்த ஆலவாயிறைவரைப் பணிந்து, * வெள்ளி மன்றுள் நடம்புரியும் பெருமானே. இப்பொருள்க ளெல்லாவற்றையும் நினக்கும் நின் பால் அன்புடைய அடி யார்களுக்கும் உரியனவாகச் செய்தருளுக என வேண்டி * w: *, * - ~. - *瓷惑盜對 釜 '## ## ! - t 鸞 நின்ஞர். அப்பொழுது இறைவனருளால் ஆதி சைவசாகிய