பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

பன்னிரு திருமுறை வரலாறு


ருண்டில் மாளிகை மடம் என்ற பெயரோடு சிதம்பரத்தில் ஒரு திருமடம் இருந்ததென்பதும், அம்மடத்தில் வாழ்ந்த தவச் செல்வர் வெண்காடரென்பவருடைய மாளுக்கருள் ஒருவராகிய விநாயகர் என்பவரே பெரும் பற்றப் புலியூர் நம்பிக்கு ஆசிரியரென்பதும் நன்கு புலகிைன்றன. சிதம்பரத்திலுள்ளதாகப் பெரும் பற்றப் புலியூர் நம்பி குறித்த மாளிகை மடமென்பது திருமாளிகைத் தேவரது அடியார் குழுவின் தொடர்பில் நிலை பெற்ற திருவடமாக இருத்தல் கூடும்.

திருமாளிகைத் தேவர், தாம் பாடிய திருவிசைப்பாப் பதிகங்களின் இறுதிச் செய்யுட்களில் மூர்க்கனேன் மொழிந்த புன்மொழிகள்' என்றும், சிவப்பெருந் தொண் டர் தொண்டனேன்' என்றும் தாழ்வெனுந் தன்மையோடும் சிவனடியார்க்குத் தொண்டுபட்ட தம்முடைய அடிமைத் திறத்தினைப் புலப்படுத்தியதன்றித் தம்முடைய ஊர், பேர், குடி முதலியன பற்றி எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் இவர் பிறந்த குலம், ஊர் முதலிய வரலாற்றுக் குறிப்புக் களைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதற்கு இயலவில்லை. இனி இவரைப் பற்றிச் செவி வழியாக வழங்குஞ் செய்தி களை ஆராய்தல் இன்றியமையாததாகும்

திருமாளிகைத் தேவர் போக நாதரிடம் தீக்கை பெற்றுத் திருவாவடுதுறையில் தங்கியிருந்தார். இவர் தந்த சிவப் பிரசாதத்தைக் கருவூர்த் தேவர் மகிழ்ந்தேற்றுக்கொண்டார். கருவூர்த் தேவர் பராசத்தியை வழிபட்டுக் கொடுத்த பிரசாதத்தைத் திருமாளிகைத் தேவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இச்செய்தியைக் கருவூர்த் தேவர் தம் ஆசிரியர் போகநாதரிடம் தெரிவித்தார். அது கேட்ட போகநாதர் துய்மை நெறியில் வழிபாடு செய்து திருமாளிகைத் தேவர் தந்த சிவப் பிரசாதத்தை நீ ஏற்றுக்கொள்ளுதல் தகும். நின் குற் கொடுக்கப் பட்ட தூய்மை யில்லாத நிவேதனப் பொருளை அவர் விலக்கியது தவறன்று என்று கருவூர்த் தேவருக்கு அமைதி கூறினர். திருமாளிகைத் தேவர் ஒருநாள் வழக்கம்போல் காவிரியில் நீராடி மலர் கொய்து வரும் பொழுது அடக்கஞ் செய்தற்கெனச் சிலர் பிணத்தைச் சுமந்து எதிரே வருதலைக் கண்டு தாம் சிவபூசைக்குக்