பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

பன்னிரு திருமுறை வரலாறு


உடம்பினெழு புகைமாற்றிக்

கொங்கணர் பாத்திரஞ் சுவற்றி யுணவதாய் வெந் திடும் பயறு முளைசெய்தெமக்

கருள் திருமாளிகைத்தேவர் இணைத்தாள் போற்றி " எனத் தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் பாடியபாடலிற் பாராட்டிக் கூறப்பட்டுள்ளன. இதன்கண் குடங்கர் விசும்பிடை நிறுவி என்றது, பூக்குடலையை ஆகாயத்தில் நிற்கும்படி செய்த செயலே. பிணத்தினை உயிர்பெற்றெழச் செய்து சுடுகாடளவும் நடக்கும்படி ஏவிய திறத்தினைக் ' குணபம் நடந்திட இயக்கி ' என்ற தொடராற் குறிப்பித் தார். இச்செய்யுளில் திருமாளிகைத் தேவர் செய்தனவாகக் குறிக்கப்பட்ட செயல்களுள் நன்காட்டின் உடம்பினெழு புகைமாற்றியது, கொங்கணர் பாத்திரஞ் சுவறச் செய்தது, வெந்த பயற்றை முளைக்கச் செய்தது ஆகியன நிகழ்ந்த சந்தர்ப்பம் மேற்காட்டிய கதையிற் குறிக்கப்படவில்லை. அவ்வக்காலத்து மக்கள் தம் மனம் போனவாறு கட்டி வழங்கிய செய்திகள் இக்கதையிலிடம்பெற்றுக் கலந்தமை யால் இக்கதை முழுவதையும் உண்மை வரலாறென்று ஏற்றுக் கொள்ளுதற்கியலவில்லை.

திருமாளிகைத் தேவர் போகநாதர் மாணவர் என இக் கதையிற் குறிக்கப்படுவதற்கு ஆதாரமாக, " கலந்தருள் காலாங்கர் தம்பாலகோரர்

நலந்தரு மாளிகைத்தேவர் நாதாந்தர் புலங்கொள் பரமானந்தர் போகதேவர் நிலந்திகழ் மூலர் நிராமயத்தோரே. (102) என்ற திருமந்திரச் செய்யுளைக் காட்டுவர் சிலர். இச்செய் யுள் திருமந்திரத்திற் குருமட வரலாறு என்ற தலைப்பிற் காணப்படுகின்றது. இதன் இரண்டாமடி நலந்தரு நமனிய தேவர் நாதாந்தர் எனவும் சில சுவடிகளில் காணப்படு கின்றது. இதன்கண் நிலந்திகழ் மூலர் நிராமயத்தோரே' என்ற இறுதியடியை நோக்குங்கால் திருமூலர்க்கு நெடுங் காலம் பிற்பட்டுத் தோன்றிய சான்ருேரொருவரால் இயற்றப்பட்டது இச்செய்யுளென்பது நன்கு துணியப்படும். மூலன் மரபின் முதல்வராக விளங்கிய திருமூலரே தமக்கு நெடுங்காலம் பிற்பட்டுத் தோன்றித் தம்மரபில் வந்த திருமாளிகைத் தேவர் முதலியோரைத் தாம் பாடிய செய்யுளில் தொகுத்துக் கூறினரென்று கொள்வது வரலாற்று முறைக்கு முற்றிலும் முரணுகும். ஆகவே திரு