பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாத் திருமுறை 355

மூலர் அறிவுறுத்தருளிய தவநெறியை மேற்கொண்டு வாழ்ந்த அடியார் பரம்பரையைக் குறித்துப் பிற்காலத்துச் சான்ருேர் ஒருவராற் பாடிச் சேர்க்கப்பட்டனவே திருமந் திரத்திற் குருமட வரலாறு என்ற தலப்பிலமைந்த செய்யுட்களெனத் தெளிதல்வேண்டும். அன்றியும் திரு மூலர் பரம்பரையில் வந்த அடியார்களுட் சிறப்புடையார் சிலரைக்கூறும் இப்பாடலில் காலாங்கர், பாலகோரர், மாளிகைத் தேவர், பரமானந்தர், போக தேவர் என்ற வழி முறையிற் போகதேவருக்கு ஒரு தலைமுறை முந்தியவராகக் குறிக்கப்பட்ட மாளிகைத் தேவரைப் போகதேவர்க்கு மாணவரெனத் திட்டமாகக் கூறுதல் சிறிதும் பொருந் தாது. ஆகவே திருமாளிகைத் தேவர் போகநாதர்க்கு மாணவர் என்னுங் கதையினை ஏற்றுக் கொள்ளுதற்குச் சிறிதும் இடனில்லையென்பது தெளியப்படும்.

திருவாவடுதுறைக் கோயிலையொட்டித் திருமாளிகைத் தேவர்க்குத் திருக்கோயில் அமைந்துளது. இத்திருக் கோயிலைத் தன்னகத்துக்கொண்டு விளங்குவதே இப் பொழுது உள்ள திருவாவடுதுறைத் திருமடமாகும். இத்திருமடத்தின் அடியார்களுள் ஒருவராகிய தொட்டிக் கலைச் சுப்பிரமணிய முனிவரென்பார் திருமாளிகைத் தேவரைப் பரவி வழிபடு முகமாகத் திருமாளிகைத் தேவர் திருவிருத்தம் என்ற நூலைப் பாடியுள்ளார்.

முதல் இராசராச சோழன் ஆட்சியில் திருவிழிமிழலைத் திருக் கோயிலில் வரையப்பட்ட கல்வெட்டுக்களில், சிவ ஞானியும் திருமாளிகைத் தேவரென்று வழங்கப்பெற்றவரு மாகிய ஜயந்தன் என்பார் திருவீழிமிழலைத் திருக் கோயி லுக்கு துந்தா விளக்கு வைத்த செய்தி குறிப்பிடப்பட்டுள் ளது. ஜயந்தன் என்ற பெயர் தமிழிற் சேந்தன் என்று திரிதல் மரபு. திருவிழிமிழலைச் சாசனங்களிற் கண்ட ஜயந்தன் என்பார் சிவஞானியெனச் சிறப்பிக்கப் பெறுத லானும் திருவீழிமிழலைக்குச் சேந்தனர் பாடிய திருவிசைப் பாப்பதிகம் அமைந்திருத்தலானும் ஈண்டு ஜயந்தன் எனக் குறிக்கப்பட்டவர் சேந்தனரேயாவர். திருமாளிகைத் தேவர் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் நான்கிலும் அமைந்த திருக்கடைக்காப்புச் செய்யுட்கள் ஒன்றி லேனும் திருமாளிகைத் தேவர் பெயர் கூறப்படவில்லை. அப்பதிகங்கள் நான்கிைேடு சேந்தனர் பாடிய திருவிசைப்