பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

பன்னிரு திருமுறை வரலாறு


பாப்பதிகங்கள் மூன்றும் சேர ஏழாவதாகவமைந்த திரு விடைக்கழித் திருவிசைப்பாவின் இறுதிச் செய்யுளிற்ருன் சேந்தன் என்ற பெயர் கூறப்பட்டுளது. இதனை நுணுகி நோக்குங்கால் இவ்வேழு பதிகங்களும் சேந்தனரென்னும் ஆசிரியர் ஒருவராலேயே பாடப்பட்டன என்பது புலதை லின் திருமாளிகைத் தேவரும் சேந்தனரும் ஒருவரே என ஐயுறுவாரும் துணிவாருமுளர்

திருவிசைப்பாப் பாடிய ஆசிரியர்கள் ஒன்பதின்மர் என்பது தொன்று தொட்டு வழங்கி வரும் உண்மையாகும். திருக்கடைக்காப்புச் செய்யுளில் தம் பெயர் கூறும் வழக்கம் திருமுறையாசிரியர் எல்லாரிடத்தும் ஒப்பக் காணப்படுவ தில்லை. திருமாளிகைத் தேவர் தாம் பாடிய திருவிசைப்பாப் பதிகங்களின் இறுதிச் செய்யுட்களில் தம் பெயரைக் கூற விரும்பாது மூர்க்கனேன்’ என்றும், சிவப்பெருந் தொண் டர் தொண்டனேன்’ என்றும் தம்மைப் பணிவுடன் குறிப் பிடுகின்ருர். எனவே திருமாளிகைத் தேவர் தம் பெயரைத் தாம் பாடிய பதிகங்களில் வெளியிட்டுரைக்க விரும்பாத உள்ளமுடையவரென்பது நன்கு பெறப்படும். ஜயந்தன் என்ற சொல்லும் சேந்தன் என்ற சொல்லும் பொருளால் வேறுபட்ட இரு வேறு சொற்களாம். ஜயந்தன் என்பது வடசொல். சேந்தன் என்பது முருகக் கடவுளைக் குறித்து வழங்கும் செந்தமிழ்ச் சொல். ஆகவே சேந்தன் என்ற தமிழ்ச் சொல்லை ஜயந்தன் என்ற வடசொல்லின் திரிபாகக் கொண்டு திருமாளிகைத் தேவரும் சேந்தனரும் ஒருவ ரென்று துணிதல் பொருந்தாதென்பது புலனும்.

முதல் இராசராசன் ஆட்சிக் காலத்தில் திருவீழி மிழலைத் திருக் கோயிலில் வரையப்பட்டுள்ள கல்வெட்டுக் களில் திருமாளிகைத்தேவராகிய ஜயந்தன் எனக் குறிக்கப் படுதலால் திருமாளிகைத் தேவரென்பார் முதல் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவரென்றும் இவரது இயற் பெயர் ஜயந்தனென்றும் சிவஞானியாய்த் திகழ்ந்த காலத்து இவர்க்கு வழங்கிய பெயர் திருமாளிகைத் தேவ ரென்றும் திருவிழிமிழலைக் கோயிலுக்கு துந்தா விளக்கு வைத்த இவர் பிறந்த ஊர் திருவிழிமிழலையை யடுத்திருத்

1. சாசனத் தமிழ்க் கவி சரிதம் பக்கம் 36. பெரிய புராண ஆராய்ச்சி பக்கம் 71.