பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

பன்னிரு திருமுறை வரலாறு


அருச்சகரொருவர் வாதவூரர்க்கு முன்னே வந்து திருநீறு நல்கினர். அது கண்டு நமக்கு இதுபோலும் நன்னிமித்தம் வேறில்லை. இது நன்னெறிக்கு ஏதுவாம் எனக் கருதிய வாதவூரர், அத் திருநீற்றினை இருகை யேற்று வாங்கி யணிந்து இறைவனைப் பணிந்து விடைபெற்றுத் திருப் பெருந்துறையை யடைந்தார். அப்பதியிலுள்ள திருக்கோ யிலை யடைந்து வலம் வருங்கால் அக்கோயிலின் ஒரு பக் கத்தே குருந்தமரத்தின் அடியிலே நால்வகை நன்னெறி களிற் பயிலும் மாணவர்கள் சூழ்ந்து போற்றச் சிவஞான போதமெனும் புத்தகத்தைக் கையிற் கொண்டு யோக ஆச னத்திற் குருவாக எழுந்தருளிய இறைவரைக் கண்டார். அம்பலத்தில் ஆடும் வடிவமும் ஆலின்கீழ் நால்வர்க்கு உப தேசித்த வடிவமும் குருமேனி கொண்டு இங்கெழுந்தருளிய இத்திருவுருவமே என்ற வுணர்ச்சி அவருள்ளத்தே யுண்டா யிற்று. ஆசிரியருடைய திருவடிகளில் வீழ்ந்திறைஞ்சிஞர். அன்புருவாகிய அவர் இறைவனது அருளாகிய வலையிலகப் பட்டு நெஞ்சம் கசிந்துருகினர். அந்நிலையிற் குருவாய் வந்த ருளிய சிவபெருமான், வாதவூரர் முடிமிசைத் திருவடி சூட்டித் தீக்கை செய்து திருவைந்தெழுத்தை உபதேசித்துப் பாசத் தொடர்பகற்றி இன்பமே திகழும் சிவசொரூபமாக அவரை ஆக்கியருளினன். தேனும் பாலும் கருப்பஞ்சாறும் அமுது மாகித் தித்தித்து ஊனையும் உள்ளத்தையும் உருக்கவல்ல சிவவுணர்வு வாதவூரரது மனத்தகத்தே ஊற்றெடுத்துப் பொங்கிப் புறத்தேயும் கசிந்து படரும் நிலையில் அவர்தம் நாவிலே ஞானவானியாகிய கலைமகள் வந்து அமர்ந்தாள். தம் வசமிழந்து அன்புருவாகிய வாதவூரர். மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணிர் மல்க நாத் தழுதழுப்பத் தம்மையாட் கொண்டருளிய குருமணியைத் தொழுது போற்றுவாரா யினர். பழுதிலாத சொற்களாகிய மாணிக்கமணிகளே வரிசைப் படுத்தி அன்பாகிய வடத்திற்கோத்து இறைவன் திருவடி களிற் பாமாலையாகச் சாத்துகின்ற வாதவூார்க்கு மாணிக்க வாசகன் என்ற திருநாமத்தைக் குருவாக வந்தருளிய பெருமான் கொடுத்தருளிஞன். தித்திக்கும் மணிவார்த்தை கேட்டு மகிழ்ந்த இறைவன், வாதவூரரை நோக்கி செய்தற் கருமம் சிறிதுண்டு. இங்கே யிருப்பாயாக என்று ல்வி அடியார்களோடும் மறைந்தருளினுன். மெய்யுணர்வு குருமனியைக் காணுது உள்ளம் பதைத்து அழுது