பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

3

ஒன்பதாந் திருமுறை

“ வரையே றவிட்டமுதஞ் சேந்தனிட வுண்டனே வல்லின

உரையே றவிட்டமுதலாகுமோ வெனைச்சித்தென் றுரைக்கி

லென்னும் நரையே றவிட்டமுத னளவளுக் கொண்டு நறும் புலிசைமேவும் கரையேற விட்டமுதல்வா வுன்னேயன் றியுமோர் கதி

யுண்டாமோ எனச் சிவஞான முனிவர் பாடிய பாடலும் இவண்

நோக்கத் தக்கதாகும்.

பண்டைப் பறைச் சேந்தன் என நம்பியாண்டார் நம்பிகள் கூறுதலால் தில்லையம்பலக் கூத்தனுக்குக் களியமு தருத்திய சேந்தனரென்பவர் பறையர் குலத்தவரென்பதும் நம்பியாண்டார் நம்பிக்குக் காலத்தால் முற்பட்டவ ரென்ப பதும் நன்கு துணியப்படும். இவ்வாறு களியமுது நிவே தித்த சேந்தருைம் திருப்பல்லாண்டு பாடிய சேந்தனரும் ஒருவரேயென முன்னேர் பலரும் கருதி வந்துள்ளார்கள். இக்கருத்தினை அப்படியே ஏற்றுக்கொள்ளுதற்கோ அன்றி மறுத்தற்கோ போதிய சான்றுகள் இதுகாறுங் கிடைக்க வில்லை.

நம்பியாண்டார் நம்பிகளுக்குக் காலத்தால் முற் பட்டவர் பட்டினத்தடிகளென்பது பதினுெராந் திருமுறை யிற் பட்டினத்தடிகள் நூல்களுக்குப் பின் நம்பியாண்டார் நம்பிகள் பாடிய நூல்கள் முறைப்படுத்தப்பட்டிருத்தலால் இனிது விளங்கும். பட்டினத்தடிகள்பால் சேந்தனர் பணி புரிந்தாரென்பது நெடுநாட்களாக வழங்கி வருவதாதலின் சேந்தனரும் நம்பியாண்டார் நம்பிக்கு முன் கி. பி. ஒன்ப தாம் நூற்ருண்டின் இறுதியில் வாழ்ந்தவரெனக்கொள்ளு தல் ஏற்புடையதாகும். திருமாளிகைத் தேவர் சேந்தன ருடன் தில்லைக்குச் சென்று திருத்தேரை வடமில்லாது நிலையிற் சேர்ப்பித்தாரென்றதொரு கதை வழங்குதலால் திருமாளிகைத் தேவர் வாழ்ந்த காலமும் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் இறுதிப்பகுதியேயெனத் துணிய இடமுண்டு. கண்டராதித்தர் அல்லது சுந்தரசோழர் ஆட்சிக்காலத்த தெனக் கருதப்படும் கல்வெட்டொன்றில் "கலி விசயன் தருணேந்துசேகரனேன்" என ஒருவன் தன் பெயரைக் குறிப்பிடுகின்ருன் தருணேந்து சேகரன் என்னும்

1. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி X1ii எண் 138.