பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

பன்னிரு திருமுறை வரலாறு


இப்பெயர் சேந்தனர் பாடிய திருவாவடுதுறைத் திருவிசைப்பாவில் காணப்படுகின்றது. எனவே திரு விசைப்பா ஆசிரியராகிய சேந்தனர் முதற்கண்டராதித்த சோழர் காலத்துக்கு முற்பட்டிருந்தமை நன்கு தெளியப் படும்.

" செழுந்திரட்சோதிச் செப்புறைச் சேந்தன் எனவும் "செப்புறை அந்தமிலானந்தச் சேந்தன்” எனவும் சேந்தனர் தம்மைப்பற்றிக் கூறுதலால் இவரது ஊர் செப்புறை என்ற பெயருடையதெனத் தெரிகிறது. ஊர்ப்பெயர்கள் பல மாறி வழங்கும் இக்காலத்தில் அவ்வூர் இன்ன இடத்திலுள்ளதெனத் தெரிந்து கொள்ள இயல வில்லை. இனி செப்புறை யென்பதனை இவரது குடிப்பெய ராகக் கொள்ளினும் அமையும். திருவிடைக்கழி முருகப் பெருமானைப் பாடிப்போற்றும் சேந்தனர் அவ்வூர்த் திரு விசைப்பாவில் " மருண்டுறை கோயில் மல்கு நன்குன்றப் பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர், வெருண்டமான் விழி யார்க்கு அருள்செயாவிடுமே " எனக் குறிப்பிடுதலால் இவரது ஊர் திருவிடைக்கழியை யடுத்துள்ள பிடவூரொடு தொடர்புடையதாயிருத்தல் வேண்டும். முடியுடை வேந் தர்க்கு மகட்குடைக்குரிய வேளாளர்கள் வாழும் ஊர்களாக நச்சிஞர்க்கினியர் குறித்த "சோழநாட்டுப் பிடவூரும் அழுந்துாரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ் சிக்கலும் வல்லமும் கிழாரும் " முதலிய பதிகளுள் இப் பிடவூர் முதலில் வைத்து எண்ணப்படுதல் காணலாம். நச்சிஞர்க்கினியர் கூறும் இவ்வூர்களனைத்தும் சோழ நாட்டின் கிழக்கே கடற்கரைப்பகுதியைச்சார்ந்த ஊர் களாதலால் பி.ஆரும் இவ்வூர்களை யடுத்தே யமைந் திருத்தல் வேண்டும். திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள பிடவூர் நாட்டுப் பிடவூர் இதனின் வேறெனவே கொள்ளப் படும். திருவிடைக்கழியின் அருகிலிருந்த இப்பிடவூர் அழிந்து போயிற்றென்றும் அங்கிருந்த கடவுட்படிமங்களைத் திருவிடைக்கழியிலுள்ள திருக்கோயிலிற் கொண்டு வந்து வைத்துள்ளார்களென்றும் முதியோர் சிலர் கூறுகின்றனர்.

1. திருவிடைக்கழி திருவிசைப்பாவின் திருக்கடைக்காப்பு. 2. திருப்பல்லாண்டின் திருக்கடைக்காப்பு.

3.

திருவிடைக்கழி திருவிசைப்பா 10-ம் பாடல்.