பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை 365

பட்டினத்தடிகள் சேந்தனர் சிறை நீக்கப் பாடியதாகச் சொல்லப்படும் பாடலில் நாங்கூர்ச் சேந்தனை எனக் குறிக்கப்படுதலால் சேந்தனுர் சிலகாலம் நாங்கூரிலும் வாழ்ந்திருத்தல் கூடும் எனக் கருதுதல் பொருந்தும்.

சேந்தனர் பாடியனவாகத் திருவிழிமிழலை, திருவாவடு துறை, திருவிடைக்கழி என்ற தலங்களுக்குரிய திரு விசைப்பாப் பதிகங்கள் மூன்றும் திருப்பல்லாண்டுப் பதிக மொன்றும் ஆக நான்கு திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றில் நாற்பத்தேழு பாடல்கள் அமைந்துள்ளன.

செங்கண்மால் வழிபட விழிமிழலையில் விண்ணிழி விமானத்திற் சிவபெருமான் வீற்றிருந்தருளுமியல்பும், பொய்த்தவ நெறிகளிற் புகாது தடுத்து மெய்த்தவ நெறி யாகிய சைவ சமயத்தில் தம்மை நிலைபெறச் செய்தருளிய அப்பெருமானது அருட்குணமும், சிவனடியார்களுக்குத் தாம் தொண்டுபட்டுய்ந்த திறமும், திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகிய பெருமக்களிருவர்க்கும் விழி மிழலை யிறைவர் பரிசில்காசருளி அவர்கள் பாடிய பழுத்த செந்தமிழ் மலர்களைச் சூடி அவர்கள் திருவுள்ளத்தே நிறைந்து நின்ற பெருமையும் ஆகிய செய்திகளைத் திருவீழி மிழலைத் திருவிசைப்பாவிற் சேந்தனர் உளமுருகிப் போற்றும் முறை கற்போர் மனத்தைக் கணிவிப்பதாகும்.

"பண்டலர் அயன்மாற்கரிதுமாய் அடியார்க்

கெனியதோர் பவளமால் வரையை " எனவும்,

" ஆயிரங்கமலம் ஞாயிருயிரமுக் கண்முக கரசரணத்தோன் ” எனவும்,

“ எண்ணில் பல்கோடி சேவடிமுடிகள்

எண்ணில் பல்கோடி திண்டோள்கள் எண்ணில் பல்கோடி திருவுரு நாமம்

ஏர்கொள்முக் கண்முக மியல்பும் எண்ணில் பல்கோடி யெல்லைக்கப்பாலாய்

நின்றைஞ் நூற் றந்தனரேத்தும் எண்ணில் பல்கோடி குணத்தரேர் வீழி

யிவர் நம்மையாளுடையாரே ' எனவும் இவ்வாசிரியர் இறைவனைப் போற்றிய பகுதிகள் “ வானேர்க்கரிய மருந்தே போற்றி ஏைேர்க்கெளிய