பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

பன்னிரு திருமுறை வரலாறு


இறைவா போற்றி " என்ற திருவாசகத் தொடரை யும்,

  • ஆயிரந் தாமரைபோலும் ஆயிரஞ்சேவடியானும் *

ஆயிரம் பொன்வரைபோலும் ஆயிரந்தோளுடையானும்

ஆயிரஞாயிறுபோலும் ஆயிர நீண் முடியானும்

ஆயிரம் பேருகந்தானும் ஆரூரமர்ந்தவம்மானே (4-5-8) எனவருந் திருநாவுக்கரசர் திருப்பாடலையும் நினைவுபடுத்து கின்றன. இவர் காலத்தில் திருவீழிமிழலையில் ஐந்நூற்று வர் ' என்ற தொகையுடைய வேதியர்கள் விழிமிழலைப் பெருமான் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை ஐஞ்ஞாற்றந் தனரேத்தும் என்ற தொடராற் புலப்படுகின்றது.

திருவாவடுதுறையில் எழுந்தருளிய శక్తే " ఈ : நம்பியைக் கண்டு காதல் கொண்ட தன் மகளது அன்பின் பாற்பட்ட மொழிகளையும் செயல்களையும் எடுத்துக்கூறித் தாயொருத்தி இரங்குவதாகப் பாடப்பெற்றது திருவாவடு துறைத் திருவிசைப்பா. இதன்கண் அந்தாதித் தொடை யமைந்துளது. திருவாவடுதுறை யென்பது கோயிற் பெயர். அக்கோயில் சாத்தனூரில் அமைந்துளது என்னும் உண்மையை "அழிவொன்றிலாச் செல்வச் சாந்தையூர் அணியாவடுதுறை" என்ற தொடராற் சேந்தனுர் குறிப் பிட்டுள்ளார். " தென்கரைத் திரைமூர் நாட்டுப் பிரம தேயம் சாத்தனூர் பூரீ திருவாவடுதுறை" எனவரும் கல்வெட்டு இக் குறிப்பினை நன்கு விளக்குவதாக அமைந்துளது. சாத்தனூர் என்பது சாந்தையென மருவி யது. திருவாவடுதுறைக் கோயிலமைந்துள்ள ஊராகிய சாத்தனூரில் வேதியர் ஆயிரவர் வாழ்ந்தார்களென்றும் அவர்கள் திருவாவடுதுறையில் எழுந்தருளிய இறைவ னுக்கு மெய்மைப்பணி புரிந்தார்களென்றும் இவ்வாசிரியர் கூறுகின்ருர். " பொய்யாத வேதியர் சாந்தை மெய்ப் புகழாளர் ஆயிரம் பூசுரர், மெய்யே திருப்பணி செய்சீர் மிகுகாவிரிக் கரைமேய, ஐயா திருவாவடுதுறை யமுதே'

எனவரும் பாடலில் இச்செய்தி குறிக்கப்பட்டமை காண்க.

திருவிடைக்கழி என்ற தலத்தில் திருக்குரா நீழலில் எழுந்தருளிய முருகப்பெருமானைக் கண்டு காமுற்ற தலை மகளின் ஆற்ருமையை நினைந்து இரங்கிய நற்ருய் கூறுவ

1. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி XIII எண் 18,