பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

பன்னிரு திருமுறை வரலாறு


நோக்குதற்குரியதாம். பல்லாண்டென்னும் பதங்கடந்து என்றுமுள்ள பரம்பொருளாகிய இறைவனுக்குச் சேந்தனர் பல்லாண்டிசை பாடியதன் நோக்கம், எல்லாம் வல்ல அவ் விறைவனை வாழ்த்தும் மெய்யடியார்களெல்லோரும் உடல் நலமும் உள நலமும் ஒருங்கெய்தி நெடுங்காலம் வாழ்ந்து சிவநெறியை வளர்த்தல் வேண்டுமென்னும் பெரு வேட்கையேயாகும்.

மிண்டுமனத்தவர் போமின்கள் என விலக்கி மெய்யடியார்கள் விரைந்து வம்மின் ' எனப் பேரன்பினுல் அழைத்து, மழவிடையாற்கு வழிவழியாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடியார்களாகிய அப்பெருமக்களோடுங் கூடிநின்று, ஆவிக்கு அமுதாய் மனத்தகத்தே பாலும் அமுதமும் ஒத்துநின்று அண்ணித்து ஆரும் பெருத அறிவு தந்து அடியார்க்கு அருள்புரியும் சிவலோக நாயகளுகிய பெருமானை உளமுருகிப் பல்லாண்டு கூறி வாழ்த்தும் இன்னிசைத் திருப்பதிகமாக விளங்குவது இத் திருப் பல்லாண்டாகும். இப்பதிகம் மன்னுக தில்லை வளர்க நம்பத்தர்கள் எனத் தொடங்குவதனை யாழ்ந்து நோக்குங் கால் மன்றவாணன் மலர் திருவருளால் தென்றமிழ்ப் பெருமை சிவணிய செய்த அடியவர் கூட்டம் தில்லைப் பதியில் நிலைபெற்றிருந்ததென்னும் செய்தி தெளிவாகப் புலப்படுகின்றது. இதனுலன்ருே,

" அகலோ கமெல்லாம் அடியவர்கள் தற்சூழப் புகலோகமுண்டென்று புகுமிட நீ தேடாதே புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண் ணியசீர்ச் சிவலோக மாவதுவுந் தில்லைச் சிற்றம்பலமே "

எனப் பூந்துருத்திநம்பி காடநம்பியும் போற்றினரென்க.

காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் ஆடை சாந்து அணிகலன் முதலாயின காமுகரை வசீகரித்து இன் பஞ் செய்யுமாறுபோலச் சிவசாதனமாகிய திருவெண்ணிற்றுத் திருவேடம் மெய்யுணர்வுடையாரை வசீகரித்து இன்பஞ் செய்யுமென்பார்,

" சேலுங் கயலுந் திளைக்குங் கண்ணுரிளங் கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங்குமென்று

புண் ணியர் போற்றிசைப்ப