பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுண்த 器6簿

எனப் பாடுகின்ருர். இத்தொடர் திருநீறு முதலிய சிவ சாதனங்களில் இவர் கொண்ட பேரார்வத்தினை இனிது புலப்படுவதாகும். திருப்பல்லாண்டின் இறுதித் திருப் பாடலில்,

  • எந்தையெந்தாய் சுற்றமுற்றும் எமக்கமுதாம் எம்பிரான்

என்றென்று சிந்தைசெய்யும் சிவன் சீரடியா ரடி நாய் செப்புரை அந்தமிலானந்தச் சேந்தனென " என இவ்வாசிரியர் தம்மைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்கண் சேந்தனுராற் சிவன் சீரடியார் எனப் போற்றப்பட்டவர்,

“எந்தையெந்தாய் சுற்ற மற்றுமெல்லாமென்னுடைய

பந்தமறுத் தென்னை யாண்டுகொண்ட பாண்டிப்பிரான்ச2 என இறைவனைப் பாடிப் போற்றிய திருவாதவூரடிகளே யெனக் கருத இடமுளது. இக்குறிப்பினை நோக்குமிடத்துத் திருவாதவூரடிகளுக்குப் பின் அவரடியார் குழுவின் வழி யொழுகியவர் சேந்தனரென்பது நன்கு தெளியப்படும். சோழரது ஆட்சி பரவிய கடல் கடந்த வெளி நாடாகிய சயாம் நாட்டில் அரசர் குடும்பத்தில் நிகழ்த்தப்பெறும் சடங்குகளில் திருவெம்பாவை, திருவாய்மொழி என்பவற் றுடன் மன்னுகதில்லை யெனத் தொடங்கும் இத்திருப் பல்லாண்டும் பாடப் பெறுதலுண்டென்ப. இச்செய்தியை நோக்குங்கால் சேந்தனர் பாடிய திருப்பல்லாண்டில் நம் சோழ மன்னர்க்குள்ள ஈடுபாடு நன்கு விளங்கும்.

1. " காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் ஆடை சாந்து அணிகலன் முதலாயின காமுகரை வசீகரித்து இன் பஞ் செய்யுமாறு போல மெய்யுணர்வுடையாரைக் காட்சி மாத்திரையின் வசீகரித்து இன்பஞ் செய்தல் பற்றித் திருவேடத்தையும் சிவாலயத்தையும் என்றுபசரித்தார். அது சேலுங் கயலுந் திளைக்குங் கண்ணுரிளங் கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங்கு மென்று புண் ணியர் போற்றிசைப்ப என்னுந் திருவாக்கானுமறிக ” எனச் சிவஞானமுனிவர் கூறும் விளக்கம் இவண் கருதற்குரிய தாகும். (சிவஞானபோதச் சிற்றுரை 12-ம் சூத்திரம்),

2. திருவாசகம், திருப்பூவல்லி 2-ம் பாடல்.

3. சயாம் நாட்டு அரசாங்கச் சடங்குகளைப்பற்றி வெளி வந்து உள்ள State no les of Siaா என்ற ஆங்கில நூலில் இச் செய்தி குறிப்பிடப்பட்டது. திரு ஒளவை. துரைசாமி பிள்ளையவர்கள் எழுதிய சைவ இலக்கிய வரலாறு பக்கம் 394 பார்க்க.

24