பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 23

அசற்றிய வாதவூரர், கோயில் வாயிஜ வந்தடைந்து அரசனு டைய பணியாளர்களை நோக்கி ஆடி மாதத்திற் குதிரைகள் வந்துசேரும். நீங்கள் முன்னமே சென்று இச்செய்தியை வேந்தனுக்குத் தெரிவிப்பீராக’ எனச் சொல்லியனுப்பினர். மதுரை சென்ற பணியாளர்கள், நிகழ்ந்த செய்தியை உள்ள வாறு மன்னனுக்குத் தெரிவித்தார்கள். அது கேட்ட பாண்டி யன் ஒன்றும் உரையாமல் குதிரையின் வரவின எதிர் நோக்கியிருந்தான்.

வாதவூரர் குறித்த வண்ணம் குதிரை வாராமையால் சினமுற்ற பாண்டியன், தறுகளுளர் சிலரை யழைத்து நீங்கள் இவ்வாதவூரனக் கொண்டுபோ ய்த் தண்டித்து எம்முடைய பொன்னெல்லாவ ற்றையும் வாங்குங்கள் எனப் பணித்தான். அப்பணியினை மேற் கொண்ட தண்டத் தலைவர்கள் வாதவூரடிகள் மேல் திணிந்த கருங்கல்லைப் பார மாக ஏற்றித் துன்புறுத்தினர்கள். அன்பர்பாரந் தாங்குவா கிைய இறைவனே, தாங்க முடியாத அப்பெரும் பாரத்தினை ஏற்றுப் பொறுத்துக் கொண்டமையால், வாதவூரர் அத் துன்பத்தால் சிறிதும் வருந்தாதிருந்தார். அவரது நிலையினைக் கண்ட தண்டத்தலைவர் இது மாயம் போலும் என வெகுண்டு அடிகளுடைய கைகளி லும் தாள்களிலும் கிட்டி கட்டி நெரித்தார்கள். இரவுப்பொழுது எய்தியதும் அவரை விலங்கிட்டுச் சிறையிலடைத் துத் துன்புறுத்தினர்கள். வாதவூரர் இறைவன் திருவடிகளைப் புணையாகக்கொண்டு துயரக்கடலைக் கடந்தார். 激

வாதவூராது துயரத்தைப் போக்கத் திருவுளங்கொண்ட சிவபெருமான், ஆவணி மூல நாளில் நந்தி முதலிய சிவகனத் தலைவர்களைக் குதிரைச் சேவகர்களாகவும் காட்டிலுள்ள நரி களைக் குதிரைகளாகவும் ஆக்கித் தாமும் வேதப்பரிமீது அமர்ந்து மதுரைத் தெருவில் பாண்டியன்ெதிரே வந்து தோன்றிஞர். இறைவனது அருட்கண்ணுேக்கத்தைப்பெற்ற பாண்டியன், மனமயங்கித் தன்னை மறந்து இருக்கைவிட்டு எழுந்து இருகைகளையும் தலைமேற்குவித்து நின்ருன், பின்னர் இறைவன் ஆணையால் மெய்யுணர்வு தடைப்பட ஆன்மபோதம் மேலோங்கப்பெற்ற பாண்டியன், இன்று நாம் குதிரை வீரனுெருவனேக்கண்டு எழுந்து கைகூப்பி வணங்கி

s - : 'ు ఫీ, జ ... ; : #, ళ్ల நின்றது என்ன ? எனத் தனக்குள் சிந்தித்து மீள ஆசனத்தில் அமர்தற்கு நாணி நின்ருன். .