பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

பன்னிரு திருமுறை வரலாறு


நிலைபெற விருத்தலும் இவருடைய அன்ருட அலுவல்

களாயின."

இவ்வாறு இரவு பகலாக இறைவனது திருவருளை யெண்ணி மகிழுமியல்பினராகிய இப்பெரியார், உணர்வின் நேர்பெற வரும் சிவபோகமாகிய பேரின்ப நிலையைத் தம் ஐம்பொறிவாயிலாகவும் நுகர்ந்து இன்புறும் நற்பேறுடைய ரானுர். மாற்ற மனங்கழிய நின்ற பெருமானைத் தம் கண்ணுரக் கண்டு பிறவிநோய் தீர்க்கும் அருமருந் தாகிய இறைவனது அருளாரமுதத்தை ஆரப்பருகி அல்ல லெலாந் தீரப்பெற்று அகமகிழ்ந்தார். தாம் பெற்ற பேரின்பத்தினை எல்லோரும் பெற்று இன்புறவேண்டுமென விரும்பினர். வேதமாகிய தேனை நிறையப் பருகியின் புற்ற இப்பெரியார், வேதங்கள் ஐயா வென ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியணுகிய இறைவனது திருவருளை யடைந்தின்புறு தற்கு வீறுயர் செந்தமிழால் ஞானசம்பந்தப் பிள்ளையார் அமைத்த பதிகப் பெருவழியை நாடினர். இன்ன தன்மையன் என்று அறியவொண்ணுத இறைவனது பேரருட் பண்பினை இவ்வுலகோரனைவரும உணர்ந்து மகிழ்தற்கேற்ற வகையில் ஆலைப்படுகரும்பின் சாறு போன்றும் ஆராவமிழ்தம் போன்றும் அண்ணிக்கும் இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடியருளினர்.

இவ்வாசிரியர், சிவயோக நெறி நின்ற சித்தராய் நோய் முதுமை முதலிய துன்பமின் றி இவ்வுலகில் நெடுங்காலம் வாழ்ந்தவரென்பது " அருமருந்தருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொன் மாலை" என வருந்தொடரால் இனிது புலளும். கருவூர்ச் சித்தராகிய இப்பெரியார் இவ்வுலகில் நெடுங்காலம் வாழ்ந்தமைக்கு அருமை நிறைந்த தமிழ்ப் பாடல்களால் இறைவனைப் பாடி மகிழவேண்டுமென்னும் பெருவிருப்பமே காரணமாகும். இதனை ஆரணத் தேன்

1. ஒருங் கிருங்கண் ணின் எண்ணில் புன்மாக்கள்

உறங்கிருள் நடுநல்யாமத்தோர் கருங்கனின்றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங்

கலந்தெனக் கலந்துணர் கருவூர் '


(திருவிடைமருது-10)

என இவ்வாசிரியர் தமது அநுபவத்தை வெளியிட்டமை நினைந்து இன்புறத்தக்கது.