பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை So

அப்பெருவேந்தர்களை நெருங்கி அளவளாவும் நிலையின ராய்க் கருவூர்த்தேவர் சிவநெறியினை வளர்த்து வந்தார். துறந்தார்தம் தூநெறிக்கட் சென்ற இப்பெரியார், சோழ மன்னர் பால் அளவற்ற பேரன்புடையராய் அவர்களுக்குச் சிவனது திருவருளில் நம்பிக்கை யுண்டாக்கிச் சிவநெறியில் தளராத உறுதியுடையராயொழுகப் பணித்தார். சோழரது பேரரசு நாடெங்கும் விரிந்து சிறத்தற்கு இன்றியமையாத தறுகண் உணர்வினைத் தமிழ் மக்கள் உள்ளத்தே கிளர்ந் தெழச் செய்தருளினர். முடிவேந்தர் அடிபணிந்து போற்றும் திருவருட் செல்வராகிய இச் சிவயோகியார், அரசர் பெருந்திருவினை நுகர் தற்கேற்ற நல்ல வாய்ப்பினைத் தாம் பெற்றிருந்தும், அவ் வாய்ப்பு தம்மை உல்கியற் பாசத் திற் பிணித்துவிடுமெனத் தெளிந்தவராதலின், அரசர் பெருஞ்செல்வத்தை நுகருமுளமின்றிக் கையில் ஒட்டினை உண்கலகை ஏந்திக்கொண்டு ஊர்தோறும் திரிந்து பிச்சை யேற்று உண்ணும் எளிய வாழ்க்கையினையே மேற்கொண் டொழுகினர்.

இங்ங்ணம் தெருவிற் பிச்சையேற்றுத் திரியும் கருவூர்த் தேவரின் உள்ளத்துயர்ச்சியினை நன்குணர்ந்த கங்கை கொண்ட சோழன், அச்சிவயோகியாரைப் பணிந்து அவர் திருவாய் மலர்ந்தருளிய திருவிசைப்பாத் திருப்பதிகங்களை இறைவன் திருமுன்னர் அன்புடன் ஓதி வழிபடும் வாயிலாக இறைவனது திருவருளை நிரம்பப்பெற்று, வேந்தரெலாந் தன் ஆணைவழி யடங்கி யொழுகச் செய்யும் வீறுடைய பேரரசனுக விளங்கினன். இச்செய்தியினை, " மங்கையோ டிருந்தே யோகுசெய்வானை

வளரிளந்திங்களே முடிமேற் கங்கையோ டணியுங் கடவுளைக் கங்கை கொண்ட சோழேச் சரத்தானை அங்கையோடேந்திப் பலிதிரிகருவூர்

அறைந்த சொன்மாலையால், ஆழிச் செங்கையோ டுலகில் அரசு வீற்றிருந்து

திளைப்பதுஞ் சிவனருட்கடலே " எனவருங் கங்கைகொண்ட சோழேச்சரத் திருவிசைப் பாவின் திருக்கடைக்காப்புச் செய்யுளில் கருவூர்த் தேவரே தெளிவாக எடுத்துரைத்துள்ளார். சிவபெருமானுக்குக் கங்கைகொண்ட சோழேச்சரமெனத் தன் பெயராற் பெருங் கோயிலெடுத்து அப்பெருமான்பால் அளவிலாப் பேரன்