பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

பன்னிரு திருமுறை வரலாறு


புடையவனுகி விளங்கிய கங்கைகொண்ட சோழன் எல்லாம் வல்ல இறைவனது திருவருளால் வேந்தரெலாம் வணங் கும் பெருவேந்தளுகி இவ்வுலகில் ஆணைச்சக்கரமாகிய ஆழியைச் செலுத்திப் பேரரசு புரிந்தும் அவ்வரசபோக மாகிய சிற்றின்பத்தி லழுந்தாது சிவனருட்கடலாகிய பேரின்பவெள்ளத்துள் திளைத்து இன்புற்ருன் என்ற நற்செய்தியை உலக மக்களுக்கு எடுத்துரைக்கு முகமாக எல்லோரும் சிவனது திருவருளை விரும்பிச் செம்மை நெறியில் ஒழுகுதல் வேண்டுமென்பதனை இத்திருக்கடைக் காப்புச் செய்யுளால் கருவூர்த்தேவர் அறிவுறுத்தருளிய திறம் என்றும் நினைந்து இன்புறுதற்குரியதாகும்.

கருவூர்த் தேவர் பாடிய பத்துப் பதிகங்களிலும் நூற்று மூன்று பாடல்கள் காணப்படுகின்றன. கணம் விரிகுடுமி யெனத்தொடங்கும் திருவிசைப்பாப்பதிகம் தில்லைப் பெருங்கோயிலைப் போற்றுவதாகும். இதன்கண் அமைந்த பாடல்கள் யாவும் பெரும்பற்றப்புலியூர்த் திருவளர் திருச் சிற்றம்பலமே என்ற முடிவுடன் அமைந்துள்ளன. கடத் தற்கரிய பிறவியாகிய இப்பெருங்கடலிற் கிடந்து கரை காணுது நீந்தி அலமரும் அறிவிலாதேகிைய எளியேற்கு என்னுடன் தோன்றிய பொறிகளாகிய ஐவரும் நீங்காப் பகைவராய் மேன்மேலும் இடர்விளக்கின்றனர். இத்துன்ப நிலையில் எளியேற்குத் துணையாய் நின்று இக்கடலினின்றுங் கரையேற்றி என்னை உய்விப்பார் நின்னைத் தவிர வேறு யாருளர்? என முறையிட்டால் அந்நிலையே தோன்றி, நீ ஒரு சிறிதும் அஞ்சற்க என்று சொல்லித் திருவருள் புரியும் இறைவன் எழுந்தருளியகோயில் பெரும்பற்றப் புலியூரிலமைந்த திருவளர் திருச்சிற்றம்பலமே என்பதனை,

இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும்

ஏழையேற் கென்னுடன் பிறந்த ஐவரும் பகையே யார்துணை யென்ருல்

அஞ்சலென் றருள் செய்வான் கோயில் கைவரும் பழனங் குழைத்த செஞ்சாலிக்

கடைசியர் களைதரு நீலஞ் செய்வரம் பரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்

திருவளர் திருச்சிற்றம்பலமே. எனவரும் அழகிய பாடலிற் கருவூர்த்தேவர் விளக்கி யுள்ளார். இப்பாடல்,