பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§

7

7

ஒன்பதாந் திருமுறை

  • புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி

யறிவழிந்திட் டைமேலுந்தி அலமந்தபோதாக அஞ்சேலென் றருள் செய்வான்

அமருங்கோயில் '

என வரும் திருஞானசம்பந்தர் திருப்பாடற்பொருளை அடியொற்றி யமைந்திருத்தல் காண்க.

பூத்திரளுருவஞ் செங்கதிர் விரியாப்

புந்தியில் வந்தமால் விடையோன் துரத்திரட் பளிங்கிற்ருேன்றிய தோற்றம்

தோன்ற நின்றவன் '

எனக் கருவூர்த்தேவர் இறைவனது தெய்வக்காட்சியை விளக்கும் பகுதி,

' இன்றெனக்கருளி யிருள்கடிந்துள்ளத்

தெழுகின்ற ஞாயிறேபோன்று நின்ற நின்றன்மை நினைப்பற நினைந்தேன். '

என்ற திருவாசகத் தொடரையும்,

பளிங்கேபோல் அரிவைபாகம் ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன் '

எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரத் தொடரையும்

நினைவுபடுத்துகின்றது.

களந்தையென்பது தஞ்சை ஜில்லா திருத்துறைப் பூண்டி தாலுகாவிலுள்ள களப்பாள் என்ற ஊராகும். களப்பாள் களந்தையென மருவிற்று. இவ்வூரிலுள்ள கோயில்களுள் அழகியநாதசுவாமி திருக்கோயில் முதலாம் ஆதித்த சோழனுற் கட்டப்பெற்றமையால் ஆதித்தீச்சுரம் என வழங்கப்பெறுகின்றது. இச்செய்தி ' களப்பாள் உடையார் திருவாதித்தீசுரமுடையார் ' என இக் கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுத் தொடரால் உறுதியாதல் தெளியப்படும். கருவூர்த்தேவர் பாடிய கலைகள் தம்பொருளும் என்ற முதற்குறிப்புடைய திருவிசைப்பாப்பதிகம் களப்பாள் என்ற ஊரிலுள்ள இவ்வழகியநாதசுவாமி கோயிலைப்பற்றிப் பாடப்பெற்ற தென்றே கொள்ளுதல் வேண் டும் . இதன்கண்

1. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி Y141 எண் 262.