பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

பன்னிரு திருமுறை வரலாறு


"கலைகள் தம்பொருளும் அறிவுமாயென்னைக்

கற்பினிற்பெற்றெடுத்தெனக்கே முலைகள் தந்தருளுந் தாயினும் நல்ல

முக்களுன் ” என இவ்வாசிரியர் இறைவன் உயிர்கள்மேல் வைத்த அளப்பரும் பேரன்பினைப் புலப்படுத்தும் பகுதி உள்ளத்தை யுருக்குவதாகும். தாயினும் நல்ல சங்கரன்' எனவும், பாணினைந்துரட்டும் தாயினுஞ் சாலப்பரிந்து எனவும் வரும் அருளாசிரியர் வாய்மொழிக்குரிய விளக்கவுரையாக இத்திருவிசைப்பாத்தொடர் அமைந்துள்ளமை காணலாம்.

திருக்கீழ்க்கோட்டுர் மணியம்பலம் என்ற திருக் கோயிலைப் போற்றிக் கருவூர்த் தேவர் பாடிய திரு விசைப்பா கோட்டுர் என்னுந் திருத்தலத்தில் அமைக்கப் பட்டுள்ள மணியம்பலத்தில் திருநடஞ்செய்தருளும் கூத்தப் பெருமானைக் காதலித்த தலைவி, அப்பெருமான் தன்னுடைய மனத்திற் கலந்து தன்னை யுருக்கிய திறத்தையும், அப்பெரு மானை யடையப்பெருது தான் வருந்துமியல்பினையும் தன் தோழி முதலியோர்க்குக் கூறுவதாக அமைந்துளது. தெளிவாகிய திருநீற்றையணிந்த இறைவனது திருவெண் னிற்றை யணிதற்கு என்னுடல் விரும்பும். என் செவி அவனது அறிவு நூல்களைக் கேட்டு மகிழும். வாய் அவ னது திருப்பெயரை மெல்லச் சொல்லி யின்புறும். கண்கள் அப்பெருமான் எழுந்தருளியுள்ள விமானத்தையே நோக்கி வெய்துயிர்க்கும். என் மனம் வள்ளலே மணியம்பலத்துள் நின்ருடும் மைந்தனே என இடைவிடாது நினையா நிற்கும் எனத் தலைவி கூறுவதாக அமைந்த பாடல் சிவபத்தரது இயல்பினை விளக்குவதாகும். திருக்கீழ்க்கோட்டுர் என ஈண்டுக் குறிக்கப்பட்ட ஊர் தஞ்சை ஜில்லா மன்னுர்குடி தாலுகாவிலுள்ள கோட்டுரே என எண்ண வேண்டியுளது. "கோட்டுர்க் கொழுந்தே" எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் உளமுருகிப் போற்றிய கொழுந்தீசர் எழுந்தருளிய கோட்டுர் இதுவேயாகும். இதனை அருள்மொழிதேவ வளநாட்டு நென்மலி நாட்டுக் கோட்டுர் எனக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. திருக்களந்தை யாதித் தேச்சரம், திருமுகத்தலை என்ற ஊர்களை வழிபட்டுத் திருவிசைப்பாப் பாடிய கருவூர்த்தேவர் அவ்வூர்களை

1. திருக்கீழ்க்கோட்டுர் மணியம்பலம் 4-ம் பாடல்,