பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை 373

யடுத்துள்ள இக்கோட்டுரையும் வழிபட்டுத் திருவிசைப்பாப் பாடியிருத்தல் பொருத்தமேயாம். இவ்வூர்க்கோயிலில் கூத்தப்பெருமானெழுந்தருளிய அம்பலம் கருவூர்த் தேவர் காலத்தில் மணியம்பலம் என்ற பெயரால் வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும்.

புவனநாயகனே எனத் தொடங்குந் திருவிசைப்பாப் பதிகத்தாற் போற்றப்பெற்ற திருமுகத்தலை யென்பது, தஞ்சை ஜில்லா திருத்துறைப்பூண்டி தாலுகாவிலுள்ளது. இவ்வூரிற் கோயில்கொண்டருளிய இறைவன் பன்னகா பரணேசுரர் எனப் போற்றப்பெறுகின்ருர். இங்கெழுந் தருளிய இறைவனைக் கருவூர்த்தேவர் பன்னகாபரணு ’ என உளமுருகிப் போற்றுதலால் இப்பெயர் வழங்கிய தெனத் தெரிகிறது. திருமுகத்தலை யென்ற இவ்வூர் இக்காலத்தில் தன் பெயரை யிழந்து பன்னத்தெரு என்ற பெயரால் வழங்குகின்றது. பன்னகாபரணன் தெரு என்ற பெயரே பிற்றை நாளில் பன்னத் தெரு’ எனச் சிதைந்து வழங்கியதாதல் வேண்டும். எல்லாப் புவனங்களுக்குந் தலைவனும் உயிர்களின் உள்ளத்தே இனிக்கும் அமுதான வனும் எங்கும் நீக்கமற நிறைந்தவனுமாகிய இறைவன் உலகத்திற்குக் கண்ணுகிய ஞாயிற்றைப் போன்று அறியாமையாகிய இருளையகற்றித் தம்முடைய உள்ளத்தி லும் திருமுகத்தலையிலுள்ள பூங்கோயிலிலும் எழுந்தருளிய தன்மையையும், அப்பெருமான் அடியார்க்கெளிவந்தருளும் பெருமையையும், தம் நெஞ்செலாம் நிறைந்து நின்று பவளம் போன்ற செவ்வாயினுல் அருளுரை வழங்கித் தம்பக்கல் ஆனந்த வெள்ளம் இடையருவண்ணம் பண்ணிய செய்தியையும், அப்பெருமான் தம் உடம்பினுள்ளே புகுந்து நின்றமையால் வினைப்பயனுய் வந்த தம்முடம்பு அவ் விறைவன் எழுந்தருளியிருத்தற்குரிய எழில்மிக்க விமான மாய் விளங்குமியல்பினையும் இத்திருப்பதிகத்தில் கருவூர்த் தேவர் உளமுருகிப் பாராட்டிக் கூறியுள்ளார்.

நீரோங்கி வளர்கமலம் ' என்ற முதற்குறிப்புடைய திருவிசைப்பாத் திருப்பதிகம் திரைலோக்கிய சுந்தரம் என்ற திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவனைப் போற்றிப் பாடப்பெற்றதாகும். இத்திருக்கோயிலமைந் துள்ள இடம் மண்ணிநாட்டு ஏமநல்லூராகும். எமநல்லுர் ரென்பது எச்சில் இளமர் ஏமநல்லூர்' எனத் தேவாரத்திற்