பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை 38?

ஆசிரியர்களைப் பற்றியும் அவர்கள் பாடிய பதிகவகை பண் வகை பற்றியும் கூறும் பழைய பாடல்களில் நம்பிகாடவர் கோன்', வீறிற் சிறந்த காடவர் ', காடவர் கோன் என இவ்வாசிரியர் பல்லவர் குலத்தவராகப் பேசப் படுதலாலும் திருவிசைப்பா ஆசிரியர்களில் கங்கை கொண்ட சோழன் காலத்திற்குப் பிற்பட்டிருந்தவர் ஒருவருமில்லையெனத் தெரிதலாலும் முதல் இராசா திராசன் காலத்துக் கல்வெட்டில் குறிக்கப்பட்ட நம்பிகாடநம்பி என்பார் திருவிசைப்பா ஆசிரியராகிய பூந்துருத்தி நம்பிகாடநம்பியின் பெயரைப் புனைந்து வாழ்ந்த மற்ருெருவரென்று கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

சுந்தரர் வெள்ளான மீதும் சேரமான் பெருமாள் குதிரைமீதும் அமர்ந்து திருக்கயிலாயத்தை அடைந் தார்கள் என்று திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பி யாண்டார் நம்பிகள் கூறியிருத்தலையும் நம்பியாண்டார் நம்பிகள் கூறியபடியே தஞ்சைப்பெரிய கோயிலில் ஒவியம் எழுதப்பெற்றிருத்தலையும் நோக்காது, சுந்தரரும் சேரமானும் வெள்ளே யானையின் மீது அமர்ந்து திருக் கயிலாயத்தை அடைந்ததாக நம்பிகாடநம்பிகள் தில்லைத் திருவிசைப்பாவில் பாடியுள்ள ரென்றும், இவர் கூறுமாறு சேரமான் யானைமீது திருக்கயிலை செல்வதாக அமைந்த ஓவியம் இரண்டாம் இராசராசன் கட்டிய இராசராசேச்சுர மாகிய தாராசுரத்திருக்கோயிலில் வரையப்பட்டுள்ளது என்றும், அவ்வோவியத்தை எண்ணியே நம்பிகாட நம்பிகளும் சேரமான் வெள்ளானை மீது சென்றதாகப் பாடியுள்ளார் என்றும், எனவே நம்பிகாடநம்பி என்பார் இரண்டாம் இராசராச சோழன் காலத்திலோ அன்றி அவன் காலத்திற்குப் பின்னரோ வாழ்ந்திருத்தல் வேண்டும் என்றும் கருதுவாருமுளர்

களையாவுடலோடு சேரமான் ஆரூரன் விளையா மதமாரு வெள்ளான மேல்கொள்ள முளையா மதிசூடி மூவாயிரவரொடும் அளையா விளையாடும் அம்பல நின்ஞடரங்கே ’ எனவரும் இத்திருவிசைப்பாவில் வெள்ளான மேல் கொள்ளுதலாகிய வி ைக்கு ஆரூரன் எழுவாயாகவும் சேரமான் என்பது அவ்வாருரனுக்கு அடைமொழியாய்

1. பெரிய புராண ஆராய்ச்சி, பக். 73.