பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390

பன்னிரு திருமுறை வரலாறு


சோழனுகிய தம் தந்தை தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன்வேய்ந்து பொன்னம்பலமாக்கிய திருப்பணியை, " வெங்கோல் வேந்தன் தென்னுடும் ஈழமுங்கொண்டதிறற்

செகோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன்

பொன்னணிந்த

அங்கோல் வளையார் பாடியாடும் அணிதில்லையம்பலம் ' என்ற தொடராற் குறிப்பிட்டுப் போற்றியுள்ளமை இவர் தம் தந்தையின்பால் வைத்த நன்மதிப்பையும் தில்லை யம்பலவன் திருப்பணியில் இவர்க்குள்ள ஈடுபாட்டினையும் நன்கு விளக்குவதாகும்.

சிதம்பரம் தாலுகா உடையார்குடியிற் காணப்படும் கல் வெட்டொன்று இவரை மேற்கெழுந்தருளியதேவர்' எனக் குறிப்பிடுகின்றது. பங்களூர் ஜில்லாவிற் காணப்படும் மற்ருெரு கல்வெட்டு இவரைச் சிவஞான கண்ட ராதித்தர்' எனச் சிறப்பித்துப் போற்றுகின்றது.’ இவ்வேந்தரது படைத்தலைவர்களுள் ஒருவன் கங்கநாட்டில் மழவூர்க் கோயிலில் கண்ட ராதித்தவிடங்கரையும் உமாபரமேசுவரி யையும் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிபந்தமளித்து உள்ளான். இக்குறிப்புக்களை நுணுகி நோக்குங்கால் கண்ட ராதித்தராகிய இவ்வேந்தர் சிவதலங்களை வழிபட வேண்டிச் சோழ நாட்டிற்கு மேற்கே சென்றிருத்தல் வேண்டுமென்றும், மைசூர் நாட்டில் நந்தியென்னும் ஊரிலுள்ள திருக்கோயிலில் சிவயோக நிலையிலமர்ந் திருக்கும் சோழமன்னர் உருவமும் கோனேரிராசபுரத்தில் செம்பியன் மாதேவியார் எழுந்தருளுவித்த கண்டராதித்த தேவர் திருவுருவமும் ஒத்திருத்தலும் இதற்குச் சான்ரு மென்றும் அறிஞர் தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் ஆராய்ந்து எழுதியுள்ளார்கள்."

கண்ட ராதித்த சோழர் கி. பி. 957-ல் இறைவன் திரு வடி நீழலெய்தினர். இவருடைய மனைவியார் செம்பியன் மாதேவியார் சிவஞானியாக விளங்கிய தம் கணவரை நினைவு கூர்ந்து போற்றும் நிலையிற் சிவபெருமானுக்குப் பலவகைத்திருப்பணிகளைப் புரிந்தமையால் மாதேவடிகள்

IIS. 540 of 920. Ep. Car., Vo!. IX Chennapatinam. No. 92. Portrait sculpture of South India. P. 29. பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி. 1, பக் 32-63,