பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை §§§

எனப் போற்றப்பெறும் பெருஞ் சிறப்பினை யெய்தியுள்ளார். இவ்வம்மையார் கோனேரிராசபுரமென வழங்கும் திரு நல்லத்திலுள்ள திருக்கோயிலைத் தம் கணவர் பெயராற் கண்டராதித்தம் என்ற கற்றளியாகப் புதுப்பித்துக் கண்ட ராதித்தராகிய தம் கணவர் சிவபெருமானை வழிபடும் நிலையில் அத்திருக்கோயிலில் அவர்க்கொரு படிமமும் அமைத்துள்ளார்கள். இச்செய்தி, ஸ்வஸ்தி பூரீ கண்ட ராதித்த தேவர் தேவியார் மாதேவடிகளான பூரீ செம்பியன் மாதேவியார் தம்முடைய திருமகளுர் பூரீ மதுராந்தக தேவரான பூரீ உத்தம சோழர் திரு ராஜ்யஞ் செய்தருளா நிற்க தம்முடையார் பூரீ கண்டராதித்ததேவர் திருநாமத் தால் திருநல்லமுடையார்க்குத் திருக்கற்றளி எழுந்தருளு வித்து இத்திருக்கற்றளியிலேய் திருநல்ல முடையாரைத் திருவடி தொழுகின் ருராக எழுத்தருளுவித்த பூரீ கண்ட ராதித்ததேவர் இவர் ' என அப் படிமத்தின்கீழ்ப் பொறிக்கப்பட்டிருத்தலால் நன்குணரப்படும்.

சிவஞான கண்டராதித்தராகிய இவ்வேந்தர் சைவ சமயத்திற் பேரீடுபாடுடையராயினும் நாடாளும் வேந்தர் என்ற முறைமையில் தம்நாட்டுக் குடிமக்கள் மேற்கொண் டொழுகிய வைணவம் சமணம் முதலிய பிற சமயங்களையும் இகழாது நன்கு மதித்து ஆதரித்துள்ளார். தம் பெயரால் அமைத்த கண்ட ராதித்த சதுர்வேதி மங்கலத்தில் கண்ட் ராதித்த விண்ணகரம் எனப் பெயரிய திருமால் கோயிலை இவர் கட்டியிருத்தலும், தென்னுர்க்காடு ஜில்லாவிலுள்ள பள்ளிச்சந்தல் என்ற ஊரிற் கண்டராதித்தப் பெரும் பள்ளி யென இவர் பெயராற் சமணப்பள்ளி யொன்று வழங்கப்பெறுதலும் இவரது சமயப் பொது நோக்கினைத் தெளிவாகப் புலப்படுத்துவனவாம்.

இனி, இத்திருவிசைப்பா ஆசிரியராகிய கண்ட ராதித்தரென்பார், முதல் இராசராசன் ஆட்சியில் திருக் கோயில்களை மேற்பார்க்கும் அதிகாரியாக விளங்கியவரும் உத்தமசோழன் புதல்வருமாகிய இரண்டாங் கண்ட் ராதித்தரெனக் கருதுவர் சிலர் திருவிசைப்பாப் பாடிய

1. S. I. I,, Vol, III. No. 146. 2. Ins., 78. of 1920,

3. Ins. 448 of 1938. 4. சோழ வமிசச் சரித்திரச் சுருக்கம். பக் . 16.