பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 5

செய்துவிட்டுத் தமக்குரிய பங்கினை அடைக்காமல் பிட்டினை உண்டு ஆடிப்பாடிப் பொழுது போக்கினர். உடைப்பு அடை பட்டதன நோக்கவந்த அதிகாரிகள், வந்திக்கு அளந்த பங்கு அடைபடாமை கண்டு வெகுண்டனர். வந்தியின் ஆளாய் வந்த இறைவனைச் சினந்து நோக்கி அவனது திருமேனியின் இயல்பறிந்து அடித்தற்கு அஞ்சிக் கொற்ரு ளாகிய அவனது குறும்பினை அரசனிடம் சென்று தெரிவித் தார்கள். அதுகேட்ட பாண்டியன் அமைச்சர்களுடன் கரை யினைக் காணவந்தான். வந்தியின்பங்கு அடைக்கப்பெருமல் கரையினை யழித்து வெள்ளம் பெருகுதலைக் கண்டு அள விறந்த வெகுளியுடையவனுய், இப்பங்கினை யடைப்பவன் எங்கே சென் ருன் என வினவிஞன். அரசனது சினங்கண்டு அஞ்சிய ஏவலாளர், வந்தியின் கூலியாளைக் கையிற்பற்றி யிழுத்து வந்து மன்னன் முன்னே நிறுத்தினர். கொற்ருளைக் கண்டு சினந்த பாண்டியன் தன் கையிலுள்ள பொற்பிரம் பினை ஓங்கி அவர் முதுகில் அடித்தனன். வந்தியாளாய் வந்த இறைவர் கூடையோடுமண்ணை உடைப்பிலே கொட்டி விட்டு விரைவில் மறைந்தருளிஞர்.

சிவபெருமான் ஆகாயத்திலே தோற்றுவித்தருளிய அருள் வாக்கினுல் வாதவூரடிகளது சிவபக்தி மாண்பினை நன்குனர்ந்த பாண்டியன், அச்சமும் உவகையும் அதிசய மும் ஒருங்கெய்தித் திகுவாலவாய்த் திருக்கோயிலையடைந்து சிவனருளில் திளைத்திருந்த திருவாதவூரடிகளுடைய திரு வடிகளில் வீழ்ந்து வணங்கிஞன். அடியேன் அறியாமை யாற் செய்த நீங்குகளையெல்லாம் பொறுத்து மாசுநீக்கி இந்நாட்டினைக் காத்து எங்களை ஆட்கொண்டருள்வீராக எனக் குறையிரந்து வேண்டி நின்ருன். அன்பராகிய வாத ஆசடிகள் இறைவனருளைப் பெறுதற்குத் தமக்குச் சார்பாய் நின்ற பாண்டிய மன்னனைப் பாராட்டி வாழ்த்தினர். " ஆலவாயிறைவன் அடியேனத் தில்லைக்குச் செல்க எனப் பணித்தான். அரசராகிய நீவிரும் அதற்கு இசைதல் வேண்டும் என்துரைத்துப் பாண்டியன் பால் விடைகொண்டு புறப்பட்டார். அடிகளது சிவபத்தியில் ஈடுபட்ட பாண்டியன் ‘அவரைப் பிரிய மன மின்றித் தொடர்ந்து உடன் சென்ருன். அடிகள் நில்லுமின், தில்லுமின்' எனப் பணித்து மதுரையி னின்றும் புறப்பட்டார். சிவபெருமான் கோயில்கொண் டருளிய திருத்தலங்கள் பலவற்றையும் பணிந்து போற்றித்