பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை ః

என்ற பதிகமாகும். தில்லைச்சிற்றம்பலவணுகிய எம்பெரு மானைக் காண்பது என்று கொலோ எனவும் அவன் மலர்ப் பாதங்களைச் சேர்ந்தின்புறு நாள் எந்நாளோ எனவும் தன் உயிர்க்குயிராகிய இறைவனை நினைந்து தலைமகள் கூறும் பரிவுரைகள் அவளது பேரன்பின் திறத்தை நன்கு புலப் படுத்துவனவாம்.

அ. புருடோத்தமகம்பி

'மாசிலா மறை பல ஒது நாவன் வண்புருடோத்தமன்" என்று இவ்வாசிரியர் தம்மைப்பற்றிக் கூறுதலால், இவர்க்கு பெற்ருேர் இட்ட பெயர் புருடோத்தமன் என்பதும், இவர் நான்மறைகளைப் பிழையற ஒதும் நாவினராகிய வேதியர் குலத்திற் பிறந்தவரென்பதும் நன்கு தெளியப்படும். இவர் வைணவ சமயத்திற் பிறந்து சிவ பத்தராயினுரென்பர் சிலர். இங்ங்னங் கருதுதற்கு இவரது பெயரொன்றைத் தவிரப் பிறிதொரு சான்றுமில்லாமையால் இதனை ஒருதலையாகத் துணிதல் பொருந்தாது. இவர் பாடியனவாக ஒன்பதாந் திருமுறையில் இரண்டு பதிகங்கள் உள் ளன. தில்லைச் சிற்றம்பலமாகிய கோயிலைப் போற்றுவனவாக அமைந்த இத்திருப்பதிகங்களிரண்டும் அந்தாதித் தொடையமையப் பாடப் பெற்றுள்ளன.

வாரணி நறுமலர் ' என்ற முதற் குறிப்புடைய பதிகம், சிற்றம்பலமேய செல்வனைக் காதலித்த மகளிர் அப்பெரு மானை நோக்கி அகநெகிழ்ந்துரையாடுவதாக அமைந் துளது. தில்லைச் சிற்றம்பலத் தெங்கள் செல்வன் பால் யான் கொண்ட பெருங்காதல் எனது சிறிய உயிராற் பொறுக்கத்தக்க தன் றென்பாள், ஆவியின் பரமன்று என் ஆதரவே எனத் தலைவி நைந்து இரங்குகின்ருள். இக் கருத்து 'சிறுகோட்டு பெரும்பழந் தூங்கியாங்கு இவள் உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே' எனவரும் குறுந் தொகைச் செய்யுட் பொருளைத் தழுவியதாகும்.

தேவர்களாகிய வலிய பழிகாரர்கள் முன்னுெரு காலத்தே இறைவனுகிய நின்னைப் பணிந்து வேண்டி உனக்கு நஞ்சை யூட்டினரென்று பழைய வரலாறு கூறுவார் சொல்லுவர். அது கேட்டு, முன் நீயுட்கொண்ட நஞ்சினுல் நின் திருமேனிக்கு என்ன தீங்கு நேருமோ என மனந்