பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை $99

அன்புடைத் தொண்டர்களாகிய பூதகணங்கள் சூழ எங்கள் வீதி வழியே எழுந்தருள்வாயாக என அப்பெருமான விரும்பிவேண்டுகின்ருள். இங்ங்னம், இறைவன்பாற் கொண்ட அன்பின் முதிர்வால் தலைவியொருத்தி வேண்டு வதாக இத்திருவிசைப்பாவைப் பாடிய புருடோத்தமரைது புலமை நலம் சுவைத்து இன்புறத் தக்கதாகும்.

" தாயினு மிக நல்லையென்றடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா" எனத் தலைவி கூறுவதாக அமைந்த தொடர் " தாயினும் நல்ல சங்கரன் " எனவரும் திருநாவுக் கரசர் தேவாரத் தொடரைத் தன்னகத்துக் கொண்டு விளங்குதல் காணலாம்.

' வானவர்கள் வேண்ட' என்ற திருப்பதிகத்தில் தேவர்கள் வேண்டிக்கொண்ட அப்பொழுதே நஞ்சை யுண்டு அவர்களைக் காத்தருளிய இறைவன் ஒரு குற்றமும் புரியாத என்னுடைய தோள்வளை களைக் கவர்ந்து எனக்கு இடர்விளைப்பாரோ எனத் தலைவி ஐயுறுவதும், யான் என்னுடைய தோள்வளைகளைத் தோற்ருலும் ஆடிவருங் காரரவும் ஐம்மதியும் பைங்கொன்றையும் சூடிவரும் நிலை யில் அப்பெருமானைக் காணப் பெற்றேன் எனத் தலைவி பெருமகிழ்ச்சியடைவதும் ஆகிய பகுதிகள் படித்து மகிழ்தற் குரியன.

இவ்வாசிரியர் வாழ்ந்தகாலம் இதுவெனத் திட்டமாகச் சொல்லுதற்குரிய குறிப்புக்கள் கிடைக்கவில்லை. எனினும் இவர் கி. பி. 11-ம் நூற்ருண்டில் வாழ்ந்தவரெனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.

கூ - சேதிராயர்

இவர் சேதிநாட்டை யாண்ட குறுநில மன்னர் குடும்பத்திற் பிறந்தவராதலின் சேதிராயர் என வழங்கப் பெறுகின் ருர், சேதி நாடென்பது தென்னுர்க்காடு சில்லா வின் வடமேற்கிலமைந்த நிலப்பகுதியாகும். இது மலைய மாடுை, மலாடு எனவும் வழங்கப்பெறும். இந்நாட்டின் தலைநகர் திருக்கோவலூர். ' சேதி நன்னட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி ' என்பர் சேக்கிழார். திருத் தொண்டத் தொகையிற் போற்றப்பெறும் அடியார்களுள்