பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை 401

றும் முதற்குலோத்துங்கன் காலமுதற்கொண்டே இவர்கள் சேதிராயர் என்ற பட்டத்துடன் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டனரென்றும் ஆகவே திருவிசைப்பா ஆசிரிய ராகிய இச்சேதிராயரும் முதற் குலோத்துங்கசோழன் காலத்திலோ அன்றி அவன் காலத்திற்குச் சிறிது பின்னரோ வாழ்ந்தார் எனக்கொள்ளுதல் வேண்டுமே யன்றி அவ்வேந்தன் காலத்திற்கு முற்பட்டிருந்தவரெனக் கொள்ளுதல் பொருந்தாதென்றும் கூறுவர் சிலர். 1

இவ்வாசிரியர் தாம் பாடிய திருவிசைப்பாவின் திருக் கடைக்காப்பில் தம்மைச் சேதிராயர் என்னுது சேதிபர் கோன் என்றே குறிப்பிடுகின்ருர். இவ்வாசிரியர் கூறுமாறு போலவே இவர் குலத்து முன்னுேராகிய மெய்ப்பொருள் நாயனரைச் சேதிபன்' என நம்பியாண்டார் நம்பி குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். எனவே சேதிபன் என்னும் இப் பெயர்வழக்கம் கி. பி. பத்தாம் நூற்ருண்டி லேயே நிலவியிருந்தமை தெளிவாகத் தெரிதலால் சேதிராயர் என்ற பெயர் வழக்கத்தினை ஆதாரமாகக் காட்டி இவ்வாசிரியர் முதற் குலோத்துங்கன் காலத்திற்குப் பிற்பட்டவரெனத் துணிதல் ஏற்புடையதாகத் தோன்ற வில்லை.

1. பெரிய புராண ஆராய்ச்சி. பக்கம். 74.

26