பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாங் திருமுறை திருமூல நாயனர் வரலாறு

சைவத் திருமுறை பன்னிரண்டனுன் பத்தாந் திருமுறையெனப் போற்றப்பெறும் திருமந்திரமாலையாகிய அருள் நூலே அருளிச்செய்தவர் சிவயோகியாராய் விளங்கிய திருமூல நாயனராவர். இவ்வாசிரியரை

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் ” என நம்பியாரூரராகிய சுந்தரர் திருத்தொண்டத் தொகை யிற் பரவிப் போற்றியுள்ளார். பன்னுளும் பயில்யோக பரம்பரையில் விளங்கிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாம் கொண்டொழுகிய சிவயோக நெறிக்கு முதல்வராய் விளங்கிய திருமூல நாயனுரை நம்பிரான் திருமூலன் எனக் குறித்துப் போற்றியுள்ளமை இங்கு நோக்கத்தக்க தாகும். சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகையின் வகை நூலாகத் திருத்தொண்டர் திருவந்தாதி பாடியருளிய நம்பியாண்டார் நம்பிகள்,

குடிமன்னு சாத்தனுர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு

முடிமன்னு கூனற் பிறையாளன் றன்னை முழுத்தமிழின்

படிமன்னு வேதத்தின் சொற்படியே பரவிட்டெனுச்சி

அடிமன்ன வைத்த பிரான் மூலளுகிய அங்கணனே.

(திருவந்தாதி-86)

எனவரும் திருப்பாடலில் திருமூலர் வரலாற்றை வகுத்துக் கூறியுள்ளார். நற்குடிகள் நிலைபெற்ற சாத்தனூரில் பசுக் கூட்டத்தினை மேய்ப்பாளுகிய இடையனது உடம்பிற் புகுந்து, சென் னியிலே நிலைபெற்ற வளைந்த பிறைச் சந்திரனை யணிந்தவளுகிய சிவபெருமான (நாற்பொருள் களாற் குறைவின்றி நிறைந்த) முழுமை வாய்ந்த தமிழ் கூறிய வண்ணமே நிலைபெற்ற வேதங்கள் சொல்லியபடியே பரவிப் போற்றி எனது உச்சியிலே தன் திருவடியினை நிலைபெறச் செய்தருளிய பெருந்தகை மூலன் என்னும் பெயரையுடைய அருளாளனவன் என்பது இத் திருவந் தாதியின் பொருளாகும்.

இதன் கண், பரவிட்டு என்னும் வினையை, முழுத் தமிழின்படி பரவிட்டு எனவும், வேதத்தின் சொற்படியே