பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 பன்னிரு"திருமுறை வரலாறு

நந்தி யிணையடி நான்தலை மேற்கொண்டு புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய் தந்தி மதிபுனே அரனடி நாடொறுஞ் சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே.

(திருமந்திரம் - 73) எனவும்,

என்னை நன்ருக இறைவன் படைத்தனன் தன்னை நன்ருகத் தமிழ்ச் செய்யுமாறே (திருமந்திரம் - 81) எனவும் வரும் ஆசிரியர் வாய்மொழிகள், இந்நூல் தமிழாகமமாக அருளிச் செய்யப்பெற்ற தென்பதனை இனிது புலப்படுத்துவனவாகும்.

சதாசிவ தத்துவம் முத்தமிழ் வேத மிதாசனி யாதிருந்தே னின்ற காலம் ' (திருமந்திரம் - 76) எனவும்,

தமிழ் மண்டலம் ஐந்துந் தாவிய ஞானம் உமிழ்வது போல உலகந் திரிவர் அவிழு மனமும் எம் ஆதி யறிவுந் தமிழ் மண்டலம் ஐந்துந் தத்துவ மாமே.

(திருமந்திரம் - 1646) எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகள், திருமந்திரத்திற் கூறப்படுந் தத்துவ வுண்மைகள் செந்தமிழ் நாட்டில் வாழ்ந்த சிவஞானிகளால் அருளிச்செய்யப்பெற்ற சிறப் புடையன வாதலே நன்கு வலியுறுத்துவனவாகும்.

வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன்நூல் ஒதும் பொதுவுஞ் சிறப்புமென் றுள்ளன நாதன் உரையவை நாடில் இரண்டந்தம் பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே

帖 (திருமந்திரம் - 2397) எனவும,

வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின் ஓதத்தகும் அறம் எல்லாம் உளதர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடுபெற் ருர்களே. (திருமந்திரம் - 51) எனவும,

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன் அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம் அஞ்சலி கூப்பி யறுபத் தறுவரும் அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

  • (திருமந்திரம் - 57) எனவும,