பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூல நாயஞர் வரலாறு క్షీ}

பரகுய்ப் பராபரங் காட்டி உலகிற் றரளுய்ச் சிவதன்மந் தானே சொல்காலத் தரகுய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி உரணுகி ஆகமம் ஓங்கிநின் ருனே. (திருமந்திரம் - 61) எனவும் இந்நூலில் ஆசிரியர் வேத நூற் பொருள்களையும் ஆகம நூற் பொருள்களையும் இறைவனுாற் பொருள் எனக் கொண்டு, வேத சிவாகமங்களாகிய அவற்றைப் பொதுவும் சிறப்புமாகப் பொருளியைபுபெற எடுத்துரைத்தலால், வட மொழி வேதத்தைப் பொது நூலாகவும், தமிழிலும் வட மொழியிலும் உள்ள சிவாகமங்களைச் சிறப்பு நூலாகவும் கொண்டு இவ்விருதிறப் பொருள்களும் ஒருங்கமைய அருளிச் செய்யப்பெற்ற செந்தமிழ்ச் சிவாகமம் இத் திரு மந்திரம் என்பது நன்கு துணியப்படும். இந்நுட்பத்தினை விளக்குதற் பொருட்டே "முழுத்தமிழின்படி, மன்னுவேதத் தின் சொற்படியே பரவிட்டு என்னுச்சி அடிமன்ன வைத்த பிரான் மூலளுகிய அங்கனன் " என நம்பியாண்டார் நம்பிகள் திருமூல நாயனுரைக் குறித்துப் போற்றியுள்ளார் எனக் கருதுதல் பொருத்த முடையதாகும்.

திருத்தொண்டத் தொகையாகிய முதல்நூல், திருமூல ரது பெயரும் சிவயோகப் பண்பும் எடுத்துரைத்தது. அதன் வகை நூலாகிய திருவந்தாதி, திருமூலரது உடம்பு சாத்தனூரிற் பிறந்த ஆனிரை மேய்ப்போளுகிய இடைய னுடைய தெனவும், இவ்வாசிரியர் அவ்வுடம்பிற் புகுந்து சிவாகம வேதப் பொருள்களைத் தமிழால் அருளிச் செய்த அருளாளர் எனவும் அவர்தம் ஊரும் பேரும் அருட்பண்பும் ஞான நூலருளிய திறமும் பிறவும் வகுத்துக் கூறுகின்றது. திருத்தொண்டத் தொகையின் விரிநூலாகச் சேக்கிழா ரடிகள் தாம் இயற்றிய பெரிய புராணத்தில் திருமூலரது வரலாற்றினை 28 செய்யுட்களால் விரித்துக் கூறியுள்ளார்.

திருக்கயிலாயத்திலே சிவபெருமானது திருக்கோயி லுக்கு முதற் பெருங்காவல் பூண்ட திருநந்தி தேவரது திருவருள் பெற்ற மாணுக்கருள் ஒருவராய், அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் கைவரப்பெற்ற சிவ யோகியார் ஒருவர், அகத்திய முனிவர்பாற் கொண்ட நண்பிளுலே அவருடன் சில நாள் தங்குதற்கு எண்ணி, அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடைதற் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்