பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூல நாயனுர் வரலாறு 40?

பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றிச் சுழன்று வந்து மோப்பனவும் கதறுவனவுமாகி வருந்தின.

மேய்ப்பவன் இறந்தமையால் பசுக்களடைந்த துயரத் தினைக் கண்ட அருளாளராகிய சிவயோகியாரது உள்ளத் தில் இப்பசுக்கள் உற்ற துயரத்தை நீக்குதல் வேண்டும் என்றதோர் எண்ணம் இறைவர் திருவருளால் தோன்றி யது. இந்த இடையன் உயிர்பெற்றெழுந்தாலன்றி இப் பசுக்கள் துயரம் நீங்கா எனத் திருவுளத்தெண்ணிய தவ முனிவர், தம்முடைய திருமேனியைப் பாதுகாவலான தோரிடத்து மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினுலே தமது உயிரை அவ்விடையனது உடம்பிற் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார். எழுதலும் பசுக்க ளெல்லாம் தம் துயரம் நீங்கி அன்பினுல் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கி மோந்து கனைத்து மிகுந்த களிப்பிளுலே வாலெடுத்துத் துள்ளிக்கொண்டு தாம் விரும்பிய இடத்திற் சென்று புல் மேய்ந்தன. திருமூல நாயனர் அதுகண்டு திருவுளம் மகிழ்ந்து ஆனிரைகள் மேயுமிடங்களிற் சென்று நன்ருக மேய்த்தருளினுர், வயிருர மேய்ந்த அப்பசுக்கள், கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் முன்துறையிலே யிறங்கி நன் னிர் பருகிக் கரையேற, அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்படி செய்து பாதுகாத்தருளினர்.

சூரியன் மேற்றிசையை யணுக மாலைப் பொழுது வந் தது. பசுக்கள் தத்தம் கன்றுகளே நினைந்து தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைவனவாயின. அப்பசுக்கள் செல்லும் வழியிலே தொடர்ந்து பின் சென்ற சிவயோகியார், பசுக்கள் யாவும் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனியே நிற்பாராயினர்.

அந்நிலையில், மூலனுடைய மானமிகு மனையறக் கிழத்தி யாகிய நங்கை, என் கணவர் பொழுது சென்ற பின்னரும் வரத் தாழ்த்தனரே. அவர்க்கு என்ன நேர்ந்ததோ என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக்கொண்டு எதிர் செல்பவள், சிவயோகியார் நின்ற இடத்தை யடைந்தாள். தன் கணவனது உடம்பிற்ருேன்றிய உணர்வு மாற்றத் தைக் கண்டு இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும் என்று எண்ணி, அவரைத் தளர்வின்றி