பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூல நாயஞர் வரலாறு 409

சாத்தனூர்ப் பொதுமடத்தில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலர், யோகு கலைந்து எழுந்து முதல் நாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தம்முடம்பினைச் சேமமாக வைத்த இடத்திற் சென்று பார்த்து, அதனைக் காணுதவராகி, அதுமறைந்த செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார். பிறைமுடிக்கண்ணிப் பெருமாளுகிய இறைவன், உயிர்கள் பால் வைத்த பெருங் கருணையிஞலே அ ரு ளி ய சிவாகமங்களின் அரும் பொருள்களை இந்நிலவுலகில் திருமூலரது வாக்கினுல் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்டிறத்தால் சிவயோகியாரது முந்தைய உடம்பினை மறைப்பித்தருளிஞர். இம்மெய்ம்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்விளுல் தெளியவுணர்ந்தார். அந்நிலையில் தம்மைப்பின்தொடர்ந்து வந்த ஆயர்குலத்தவர்கட்கும் தமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்பதனை அவர்கட்கு விளங்க அறி வுறுத்தினர்; அவர்கள் எல்லோரும் தம்மைவிட்டு நீங்கிய பின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விடத்தை விட்டகன்று திருவாவடுதுறைத் திருக்கோயிலையடைந்தார். அத்திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் அம்மையப்பராகிய இறைவரை வணங்கி அத்திருக்கோயிலின் மேற்கில் மதிற்புறத்தேயுள்ள அரசமரத்தின்கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்து அமர்ந்து, உள்ளக்கமலத்தில் வீற்றிருந் தருளும் அரும்பொருளாகிய சிவபரம்பொருளோடு இரண்டறக்கூடி ஒன்றியிருந்தார்.

இங்ங்ணம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூல நாயனுர், ஊனெடு தொடர்ந்த இப்பிறவியாகிய தீய நஞ்சிலுைளவாம் துயரம் நீங்கி இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டு ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து விளங்கும் நல்ல திருமந்திரமாலையாகிய பனுவலை இறை வன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்,

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே. என்னும் திருப்பாடலைத் தொடங்கி ஓராண்டுக்கு ஒரு திருப்பாடலாக இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகள்